FreeWebSubmission.com TO KNOW MORE.....: Tamil
Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Way of the Cross - History

               சிலுவைப்பாதை : வரலாறும் போதனையும்
                                
இயேசுவின் பாடுகளை சிந்தித்து தியானிக்க திருச்சபை நமக்கு தந்துள்ள நாட்களே தவக்கால நாட்கள். இந்த நாட்களில் கிறிஸ்துவர்களாகிய நாம் மேற்கொள்ளும் மிகச் சிறந்த பக்தி முயற்ச்சிகளுள் ஒன்று தான் சிலுவைப்பாதை பக்தி முயற்சி. இந்த பக்தி முயற்சியில் பங்கு பெறும்போது இயேசுவின் துன்பத்தில் நாமும் பங்குகொண்டு நமது வாழ்வை முறைப்படுத்தி வாழ நமக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன. திருச்சபை இந்த தவக்கால நாட்களில் சிலுவைப் பாதை பக்தி முயற்சியை கடைப்பிடித்து தனி,பொது வாழ்வில் மாற்றம் காண நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறது. இந்த சிலுவைப்பாதை பக்தி முயற்சி எப்படி உருவானது வளர்ச்சி கண்டுள்ளது என்பதனை அதன் வரலாற்றுப் பின்னனியுடன் அறிந்து கொள்ள முயல்வோம்.

வரலாற்றுப் பார்வை

திருச்சபையின் ஆரம்ப காலக் கட்டத்தில் கிறிஸ்துவர்களுக்கு மிக முக்கியமான நகரங்களாக இருந்தது உரோமை மற்றும் பாலஸ்த{னம். ஏனென்றால் இயேசு பிறந்து வாழ்ந்த நகரம் பாலஸ்தீனம். இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் அறைந்த இடம் எருசலேம். அதே போல் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு இயேசுவின் சீடர் பேதுரு உரோமை நகருக்குச் சென்று போதித்து மக்களை கிறிஸ்துவர்களாக மாற வழிகாட்டுகிறார். ஏறக்குறைய திருச்சபையின் ஆரம்ப காலக்கட்டத்தில் 4-5 நூற்றாண்டுகளில் தான் கிறிஸ்துவ மதம் காண்ஸ்டன்டைன் என்ற மன்னரால் அங்கிகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கிறிஸ்துவ மதத்தின் புண்ணிய பூமியான எருசலேமுக்கு திருப்பயணம் மேற்கொண்டு இயேசு பிறந்து வாழ்ந்த மற்றும் சிலுவையில் அறையப்பட்ட இடங்களை காண பல இடங்களிலிருந்து மக்கள் திருபயணம் மேற்கொண்டனர். மிக முக்கியமாக எருசலேம் நகர வீதிகளில் இயேசு சிலுவை சுமந்து சென்ற சாலைகளில் மக்கள் சேர்ந்து செபித்து,பாடல்கள் பாடி,யேசுவின் பாடுகளை சிந்தித்து வந்துள்ளதை திருச்சபையில் ஆரம்ப கால முதலே அறிய முடிகிறது.    
 

இதே காலக் கட்டத்தில் கிறிஸ்துவ விசுவாச நிலையை வெளிப்படுத்தக் கூடிய வகையில் பல்வேறு வகையான ஓவியங்கள் சித்தரிக்கப்பட்டு மக்களது பார்வைக்கு வைக்கப்பட்டது. காலஞ் செல்லச் செல்ல இத்தகைய அழகிய ஓவியங்களை கண்டு மக்கள் செபிக்கக்கூடிய நிலைகள் திருச்சபையில் உருவாயின. ஏறக்குறைய 6ம் நூற்றாண்டுகளில் இத்தாலிய நாட்டிலுள்ள பொலோனா என்ற இடத்தில் வாழ்ந்து வந்த புனித ஸ்டீபன் மடாதிபதிகள் எருசலேமை சித்தரிக்கக்கூடிய காட்சிகளையும் இடங்களையும் வரைந்து அதிலும் குறிப்பாக யேசுவின் பாடுகளை சித்தரிக்கூடிய ஓவியங்களை தங்களது இல்லத்திலே வரைந்து வைத்து யேசுவின் பாடுகளை தங்களது மடத்திலே சிந்திக்கலாயினர்.


அதே போன்று திருச்சபையின் ஆரம்ப காலத்திலே ஓவியம்,கலை,சிற்பம் மூலம் யேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை மையப்படுத்தி கிறிஸ்துவ ஆலயங்களிலும் அதன் சுற்றுப் புறமும் வைக்கப்பட்டு திருப்பயணிகள் பக்தியை கடைபிடித்து புனித இடங்களை சந்தித்து செபிக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது. இத்தகைய நிலைகள் உரோமை மற்றும் எருசலேம் பகுதிகளில் அதிகமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த நிலையில் தான் சிலுவைப்பாதை பக்திமுயற்சியும் திருச்சபையில் உருவானது.


சிலுவைப்பாதை பக்தி முயற்சி உருவாக காரணமாக இருந்த இடம் புண்ணிய பூமியான எருசலேம் தான். ஏறக்குறைய 10ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் எருசலேம் நகரில் நல்ல சாலைகள் அமைத்து பக்தர்கள் பக்தியாக பாடல்கள் பாடி செபித்து செல்லக்கூடிய நிலை உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 1342 ஆண்டுகளில் புனித பூமியானது பிரான்சிஸ்கன் சபை துறவிகளிடம் ஒப்படைக்கப்பட்டு திருப்பயணிகளை கவரக்கூடிய வகையில் பக்திமுயற்சிகள் உருவாக்கப்பட கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலே குறிப்பிடப்பட்ட சாலைகளில் ஒரு சில காட்சிகளை சித்தரித்து குறிப்பாக அன்னை மரியாள் யேசுவை காணுதல், எருசலேம் நகர் பெண்களிடம் உரையாடுதல், சிமியோனை சந்தித்தல், படைவீரர்கள் யேசுவின் உடைகளை களைதல், சிலுவையில் அறைதல் போன்ற யேசுவின் பாடுகளை ஓவியங்களாகவும் சிற்பங்களாவும் வடிவமைத்துள்ளனர். 14 மற்றும் 15ம் நூற்றாண்டுகள் வரை 20 மற்றும் 30க்கும் மேற்பட்ட நிலைகளை உள்ளடக்கியதாக சிலுவைப்பாதை பக்திமுயற்சிகள் அமைந்திருந்தன. இதை 1462 ல் புண்ணிய பூமிக்கு திருப்பயணம்; மேற்கொண்ட இங்கிலாந்து நாட்டு “வில்லியம் வே” குறிப்பிட்டுக் காட்டுகிறார். அதோடு சித்தரிக்கப்பட்டுள்ள யேசுவின் பாடுகள் தியானிப்பதற்கு உதவியாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். 16ம் நூற்றாண்டுகளில் தான் “14” ஸ்தலங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டு வரையறை செய்யப்பட்டது. 1686 திருத்தந்தை இன்னொசெண்ட் முக்கியமான மடாதிபதிகள் வாழும் இடங்களில் சிலுவைப்பாதை பக்தியைக் கடைபிடிக்க ஆணையிடுகிறார்.


திருத்தந்தை பெனடிட் (1726) ஒவ்வொரு கிறிஸ்தவனும் இந்த பக்தி முயற்சியை மேற்கொள்ளவும் அதன் மூலம் பலனை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆணை பிறப்பிக்கிறார்.. அதன்பின் திருத்தந்தை கிளாமெண்ட் (1731)எல்லா கோயில்கள், பேராலயங்கள், திருத்தல வளாகங்கள், சிற்றாலயங்கள் கல்லறைத்தோட்டகளிலும்; இந்த பக்தி முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என கிறிஸ்துவ மக்களை பணிக்கிறர். அதன் அடிப்படையில் 17 ம் நூற்றாண்டுகளிலிருந்து இந்த பக்தி முயற்சி திருச்சபையில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது என்பதை உணரலாம்.  


சிலுவைப்பாதையின் போதனை


என்னைப் பின் செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து தன் சிலுவையை நாள்தோறும் சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும் (மத் 16.. 24) என்பது இயேசு ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் அழைப்பு.

சிலுவைப் பாதை வெறும் வெளிச்சடங்கல்ல:
பரிதாபப்பட்டு கண்ணீர் வடிப்பதற்குமல்ல:
மாறாக, நம் வாழ்வை சீர்தூக்கி பார்க்கும் வாய்ப்பு:
இறைவனுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் அரிய வாய்ப்பு:


சிலுவைப்பாதை நம் வாழ்க்கைப் பாதையாக மாறும் போது நாம் ஒவ்வொருவரும் மறுகிறிஸ்துவாக மாற முடியும். இதற்காகக்தான், இறைவன் தன் மகன் இயேசுவின் மூலம் இத்தனை துன்பங்களை நாம் உணர்ந்து பங்கேற்க வாய்ப்பு தருகிறார்.

யூத மக்கள் சிலுவையை அவமானத்தின் சின்னமாகத்தான் கருதி கொலை பாதகர்களையும் நாட்டுத் துரோகிகளையும் தண்டிக்க பயன்படுத்தினர்.  இத்தகைய சிலுவை மரணம் ஒரு மனிதனுக்கு வாய்க்கின்ற அவலத் தீர்ப்பு தான். அவமானத்தின் சின்னமாகிய சிலுவை இயேசுவின் மரணத்தினால் மகிமை பெறுகிறது (1 கொரி 1. 18). இயேவின் சிலுவை வெற்றியின் சின்னம். மனுக்குலமனைத்திற்கும் பலியான மாசற்ற செம்மறி அதில் தொங்கி இறந்து நமக்கு மீட்பைப் பெற்றுத்தந்தார். இடறலாக கருதப்பட்ட சிலுவை மனித குலம் முழுமைக்கும் வாழ்வுப் பாதையாகவும் அவரது காயங்களாலே நாம் குணம் பெற்றுக் கொள்ளவும் முடிந்தது (1 பேதுரு 2. 24). எனவே தான் மனிதர்களுக்கு மடமையாக எண்ணப்பட்ட சிலுவைச் சின்னம் இயேசுவின் இறப்பினால் வாழ்வின் ஊற்றாக உருவெடுக்கிறது.


பாலைவனத்தில் கொள்ளிவாய் பாம்புகளால் கடியுண்டவர்கள் நலமடைய மோயீசன் வெண்கலப் பாம்பை கம்பத்தில் ஏற்றினார். அதை உற்று நோக்கிய அனைவரும் உயிர் பெற்றார்கள். (எண் 21. 9) அதே போன்று தான் இயேசுவின் சிலுவைச் சாவு மனித இனம் முழுவதிற்கும் அருள் வாழ்வை பெற்றுத் தருகிறது.

அதோடு சிலுவையிலே விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே தொங்குகிற இயேசு கடவுளையும் மனிதனையும் இணைக்கும் இணைப்பின் பாலமாக இருக்கிறார். படைப்பின் தொடக்கத்திலிருந்த உறவு நிலையில் ஏற்பட்ட விரிசலை இயேசு தனது உயிரை சிலுவையில் அர்ப்பணித்ததன் மூலம் கடவுளையும் மனிதனையும் இணைக்கின்ற உறவுப் பாலமாகத் திகழ்கின்றார். பலியும் பலிப் பொருளுமாகிய இயேசு பலியாகப் போகும் கழுமரத்தை தானே சுமந்து சென்று தன்னுயிரைக் கொடுத்ததன் மூலம் கடவுளையும் மனிதனையும் இணைக்கிறார்.

அதோடு சிலுவையிலே இயேசு மனிதனையும்-மனிதனையும் இணைக்கிறார். இயேசுவின் சிலுவையில் இருபக்கமும் இரு மனிதர்கள் அறையப்பட்டிருந்தனர். இதன் மூலம் மனிதனை மனிதனுடன் இணைக்கும் உறவின் பாலமாக இருந்து தன்னையே மனிதனுடன் ஒன்றிணைக்கிறார். சின்னஞ்சிறிய சகோதரனுக்கு செய்த உதவிகளை எனக்கே செய்தீர்கள். இயேசுவின் இறப்பால்; மனிதன் மனிதனுடன் இணைக்கப்படுகின்றான். ஏனென்றால் சிலுவையின் மகத்துவமே இறையன்பிலும் பிறரன்பிலும் இணைவதில் தான் அடங்கியுள்ளது இணைவதுதான் சிலுவையின் சிறப்பு.  இந்த இரண்டையும் பிரிக்க முடியாது ஒன்றில்லாமல் மற்றது இல்லை ஏனென்றால் சிலுவைக்கு எப்படி குறுக்குச் சட்டமும் நெடுச் சட்டமும் அவசியமோ அதைப் போன்றது தான் நமது கிறிஸ்துவ வாழ்வும்.


சிலுவைப் பாதையின் பயணம் நமது தேவைகளுக்காக நாம் மேற்கொள்ளும்; திருயாத்திரை அல்ல: மாறாக இயேசுவின் மனநிலை,மதிப்பீடுகள்,நெஞ்சுரம் நமது அன்றாட கிறிஸ்துவ வாழ்வுக்குத் தேவை என்பதற்காகத் தான் சிலுவைப் பயணம். இயேசுவின் பாதையில் நடப்போம்: புதிய மனிதர்களாய் உறவை ஏற்படுத்தும் உன்னதர்களாய் புனிதர்களாய் வாழ உறுதி எடுப்போம். இனிவரும் நாட்களில் இயேசுவே நம் பாதையாகவும் பயணமாகவும் மாறவேண்டும். உள்ளங்கள் உறவின் உறைவிடமாக வேண்டும். ஏதோ கடமைக்காக கலந்து கொள்ளாமல் இயேசுவின் சிலுவைப்பாதை நம் வாழ்க்கைப் பாதையாக அமையவேண்டுமென்ற சிந்தனையோடும் இறை மனித உறவை வளர்க்கும் ஆர்வத்துடனும் பங்கேற்றால் நமது தனி வாழ்வும் பொது வாழ்வும் நிச்சயம் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகமேயில்லை.

History of Christmas


வரலாற்றில் கிறிஸ்துமஸ்

டிசம்பர் மாதமென்றாலே சற்று குளிர் நடுக்கம் இருப்பது இயற்க்கையின் நிலை. அதோடு நமது நினைவிற்க்கு வருவது நாம் கொண்டாடும் இயேசுவின் பிறப்பு பெருவிழா. எல்லா இடங்களையும் அழகு செய்து வாழ்த்துகளை சொல்லி புத்தாடைகள் அணிந்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற ஒரு விழா கிறிஸ்மஸ் விழா தான். எல்லா மதத்தினரும் உணர்ந்துகொள்ளும் விழா இதுதான் என்றால் இது மிகையல்ல. இப்படி இன்று நாம் கொண்டாடிவரும் இப்பெருவிழாவை வரலாற்றின் அடிப்படையில் அறிந்து கொள்ள முயல்வோம்.

   வரலாற்று ஆதாரங்களை புரட்டிப்பார்த்தல் ஒரு குறிப்பட்;ட நாளிலோ அல்லது காலக்கட்டத்திலோ கிறிஸ்மஸ் கொண்டப்பட்டது என்று உறுதியிட்டு கூறமுடியாது. ஆனால் மக்கள் மத்தியிலே பல்வேறு வகையான கொண்டாட்டங்கள் இருந்ததை காணமுடிகிறது. பல்வேறு நாடுகளில் மிகவும் குறிப்பாக குளிர் நிறைந்த நாட்களில் விழாக்கள் கொண்டாடியதை பார்க்க முயலும்போது பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி செல்லவேண்டும்.

மெசபட்டோமிய மரபுப்படி குளிர் காலத்தில் (டிசம்பர் ஐனவரி)அவர்களது புத்தாண்டை 12 நாட்கள் கொண்டாடியுள்ளனர். இவர்கள்; பல கடவுள்களை வழிபட்டு வந்தவர்கள். இதில் “மார்துக்” என்ற கடவுளை எல்லா கடவுள்களிலும் பெரிய முதன்மையான கடவுளாக எண்ணினர். புத்தாண்டு தினத்தன்று கடவுள் “மார்துக்” போரிட்டு தீமை செய்தவர்களை அழிப்பது வழக்கமாக நம்பப்பட்டது விழாவாக கொண்டாடப்பட்டது. இதே போன்று பாரசீகம் பாபிலோனியாலியா பழைய கிரேக்கம் போன்ற பகுதிகளிலும் டிசம்பர் – ஜனவரி மாதங்களில் பல்வேறு முக்கியமான விழாக்கள் கொண்டாப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. இந்த நாட்களில் நகரின் முக்கிய தெருக்களில் நடனமாடி உறவினர்கள் நண்பர்களை சந்தித்து வாழ்த்துக் கூறி சிறப்புவிருந்து அன்பளிப்புகள் கொடுத்தல் ஆகியவை குறிப்பிடக்கூடிய அளவில் இடம் பெற்றுள்ளன.

இதே காலக்கட்டத்தில் வாழ்ந்து வந்த உரோமையர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் யேசுவின் உயிர்ப்பை மட்டுமே பெருவிழாவாக கொண்டாடி வந்துள்ளனர். ஏனென்;றால் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் கிறிஸ்துவம் ஒரு அங்கிகரிக்கப்;பட்ட மதமாகவோ அரசியல் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட மதமாகவோ இல்லை. எனவே பல்வேறுபட்ட துன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் உட்பட்டது.

பல்வேறு வகையான துன்பங்களை கொடுமைகளை அனுபவித்த காலக் கட்டத்தில்  இவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடியதாக ஒன்றும் குறிக்கப்படவில்லை. அதே வேளையில் திருச்சபையின் ஆரம்ப காலக்கட்டத்தில் வாழ்ந்து வந்த பல்வேறுபட்ட அறிஞர்கள் பல்வேறு வகையான கருத்துகளை தருகிறார்கள். அதன் அடிப்படையில் “டியனோசியஸ் எக்சிகுஸ்” என்பவரின் கூற்றுப்படி கி மு 4 நூற்றாண்டிலிருந்து பல்வேறு முக்கிய இடங்களில் கிறிஸ்துவம் வேரூண்ற ஆரம்பித்தது. எகிப்து அந்தியோருக்கு எருசலேம் உரோமை அலெக்சான்திரியா போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்கள் சிலர் கிறிஸ்துவர்களாகவும் மற்றும் பலர் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இப்படி பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் டிசம்பர் 25ந்தேதியின்று தங்களது குல தெய்வமான “சூரிய கடவுளின்” பிறந்த நாளை கொண்டாடி வந்துள்ளனர். கிறிஸ்துவம் பரவி வந்த அந்த காலக்கட்டத்தில் பலர் கிறிஸ்துவர்களாகவும் மாறினர். ஆனால் தங்களது பழைய பழக்க வழக்கங்களை மாற்ற இயலாத நிலையில் தங்களது வழக்கமான விழாவான சூரிய கடவுளின் பிறந்த நாளை டிசம்பர் 25 கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதே சமயத்தில் கிறிஸ்துவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டுகளில் (321) டிசம்பர் 25ம் தேதியின்று இரண்டு விழாக்களையும் கொண்;டாட சட்டம் இயற்றப்பட்டதையும் அந்த நாளை விடுமுறை நாளாக கடைபிடித்துள்ளதையும் அறிய முடிகிறது. நாட்கள் செல்லச் செல்ல கிறிஸ்துவ மதம் வளர்ச்சி கண்;டது. அதே வேளையில் கிறிஸ்துவம் ஒரு மதம் என்ற நிலையை அடைந்தது அரசும் அங்கிகரித்து ஏற்றுக்கொண்;டது. ஏறக்குறைய 353-ஆண்டில் திருத்தந்தை முதலாம் ஜுலியஸ் என்பவர் டிசம்பர் 25 அன்று யேசுவின் பிறப்பை கொண்டாட திருச்சபையில் அனுமதி வழங்கினார். ஆனால் 440க்கு பிறகுதான் கிறிஸ்மஸ் ஒரு பெருவிழா என்ற நிலையில் உணர்ந்து கொண்டாடப்பட்டதாக அறிய முடிகிறது.

நான்காம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்த புனித அகுஸ்தினார் குறிப்படுகிறார். “இது (கிறிஸ்மஸ்) ஒரு தனி விழா அல்ல மாறாக மீட்பை மையப்படுத்தி இன்றே நமது மீட்பு உதயமானது” என்ற நிலையில் உணர்ந்து கொண்டாட வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.

Leadership of Jesus

இயேசுவின் தலைமைத்துவம்: பாதம் கழுவும் இயேசு
         
           உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு நோக்கத்துடன் தான் வாழ்கிறான், செயல்படுகிறான். இன்றைய மனிதன் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியைக் கண்டு ஆனந்தமடைகிறான்.  ஒவ்வொரு மனிதனும் ஒரு உயர்ந்த நிலையில் வாழ வேண்டும், வளர வேண்டும் மேன்மையான முதன்மையான பதவிகளை வகிக்க வேண்டும் கை நிறைய சம்பளம் வாங்கக்கூடிய அளவிற்கு பட்டம் பதவிகள் கிடைக்க வேண்டும் என்பது கடினப்பட்டு உழைத்து வாழ்வை நடத்துகின்ற ஒவ்வொரு குடும்பத்தின் எண்ணமும் கவலையுமாக உள்ளது.  அதே வேளையில் வேறு சிலர் தங்களது பதவியை தலைமை பொறுப்பை தக்க வைத்து கொள்ள எப்படியெல்லாம் செயல்படலாம் நற்பெயரை காத்து கொள்ளலாம் மற்றவரை மட்டம் தட்டி தான் முன்னேறலாம் என்ற சுயநலப் போக்குடன் செயல்படுவதையும் கண்கூடாக காண முடிகிறது.  இதற்கெல்லாம் மாறான ஒருநிலையில் யேசுவின் தலமைத்துவம் மையப்படுத்துகிறது இந்த பாதம் கழுவும் நிகழ்வின் மூலம.; ஒவ்வொருக்கும் கொடுக்கப்பட்டுள்ள பணியில் தன்னையும் தனது திறமைகளையும் முதன்மைப்படுத்தி தன்னுடன் பணிபுரியும் சக மனிதனை நேசிக்க, மதிக்க, அன்புசெய்ய மறந்துவிட்ட நிலையை மாற்றி உண்மையான அன்பின் பண்பு நலன்களில் வளர துணைபுரிய வேண்டும்.

    இயேசுவின் பாதம் கழுவும் இந்த செயல் ஒவ்வொரு நபரையும் இணைக்கவும், கடவுளின் அன்பை உணரவும் செய்கின்ற உன்னதமான நிலை. இயேசு கடவுளின் மகன் ஏன் தன்னையே தாழ்த்த வேண்டும். ஆதுவும் ஒரு அடிமையின் நிலைக்கு தன்னைத் தாழ்த்தக் காரணம் என்ன? மனிதத்தை அன்பு செய்யதன் செயல்பாடுதானே.


பேதுருவின் பார்வையில் இயேசு ஒரு பெரிய போதகராக, மெசியாவாக, தலைவராக கருதப்படுகிறார். இயேசுவைத் தலைவராக ஏற்றுக் கொண்ட சீடர்கள் தங்களது தலைவருக்கு பணிபுரியும் நபர்களாகத்தான் நினைத்தனர். ஆனால் மனிதத்தை மதித்கும் இயேசுவின் பணி தனியான, வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது. எனவேதான் பேதுருவால் இத்தகைய நிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. பேதுருவின் பாதங்களை கழுவ இயேசு முன் வந்த போதும் மறுப்பு தெரிவிக்கிறார். பிறகு யேசுவின் பணியில் பங்கு கொள்ள உரிமை தரும் நிலை என்பதை யேசுவின் மூலம் விளக்கம் கண்டு முன்வருகிறார் முழுவதும். 
    

    இயேசுவின் குண நலன்களில் அதிமாக வெளிப்படுத்தப்படுவது அவரது அன்பு. தமது அன்பை முழுமையாக வெளிப்படுத்துவதில் எந்தவித தயக்கமோ கலக்கமோ இல்லை என்பது நமக்கு தெளிவாக புலப்படுகிறது, இந்த பணிந்து செயல்படும் நிகழ்வில் நன்றாக வெளிப்படுகிறது. உண்மையான அன்பு என்பது எப்போதுமே அதிமான தாழ்ச்சி மற்றும் நான் என்ற தன்னல போக்குகளைக் கடந்தது. உண்மையான எந்த அன்பர்களுக்கிடையேயும் கேவலாமான அல்லது கீழ்த்தரமான செயல்கள் என இனம் காணமுடியாது.  அதே வேளையில் அதிகாரத்துடன், ஆணவத்துடன், மற்றவர்களை மதியாத எண்ணங்களுடன் செயல்படுகின்ற எந்த ஒரு நபருடைய வாழ்விலும் செயலிலும் மட்டம் தட்டுகின்ற, கேவலமான, கீழ்த்தரமான செயல்கள் என பிரித்து செயல்படுவதை காணமுடியும்.
       

     இயேசுவின் நிலை கடவுளுடன் இணைந்த இறுக்கமான நிலைதான். இயேசுவின் எண்ணத்திலும், பார்வையிலும், செயல்களிலும் முதன்மைபடுத்தப் பட்டவர்கள் தந்தையாம் இறைவனும் அடிமட்ட நிலையில் துன்புறுகின்ற ஏழைகளுமே. மனிதனையும் கடவுளையும் முழுமையாக அன்பு செய்யக்கூடிய நபர்களால் மட்டுமே தெய்வீக வல்லமையின் செயல்களை கண்டு உணர முடியும் வெறும் மனித சக்தியால் மட்டுமே  புரிந்து கொள்ள முடியாது.
           

        பாதங்களைக் கழுவுகின்ற செயல் யூத மத நடைமுறையில் இருந்த ஒன்று. விருந்துக்கு உறவினர்களின் வீடுகளைத் தேடி பல மைல் தூரம் நடந்து காலணி இல்லாமல் புழுதிபடிந்த பாதைகளில் வருகின்ற நபர்களில் பாதங்கள் கறைபடிந்து இருப்பதை நாம் கற்பனை செய்து பார்த்தால் தான் இந்த உண்மையை புரிந்து கொள்ள முடியும்.  இப்படி விருந்தினர்கள் வீடுகளுக்கு வரும்போது கறைபடிந்துள்ள பாதங்களை கழுவ அடிமைகள் வேலையாட்கள் அமர்த்தப் படுவதும் இயல்பான ஒன்று.  இப்படி பாதங்களை கழுவிய பிறகு தான் விருந்துகளில் கலந்து கொள்வதும் முறையான செயலாக மதிக்கப் பட்டது. 
          
        
          இந்த வரலாற்று நிகழ்வுகளை நோக்கும் போது நம்மில் பலருக்கு இயேசுவில் செயல் ஒரு சாதாரண செயல்தானே எனத் தென்படலாம். யூத வரலாற்றில் விருந்தினர்களின் பாதங்களை எந்த ஒரு வீட்டுத் தலைவனும் கழுவியதில்லை மாறாக இத்தகைய செயல்கள் மதிப்பில்லதா செயல்களாக கீழ்த்தரமான செயல்களாக கருதினார்கள். ஏனவே அதற்கென தனி வேலையாட்களை அமர்த்தி விருந்தினர்களின் பாதங்களை கழுவும் செயல்கள் நடந்தன. ஆனால் இயேசுவில் செயல்பாடு சதாரமான அல்லது ஒரு இயல்பான செயல்பாடு அல்ல. காரணம் தலைவராக விளங்கும் இயேசு தன்னையே பணியாளாக, வேலைக்காரனாக மற்றிகொண்டு பணிபுரிவது தான் இயேசுவின் தனித்தன்மை.  கடவுளும் மனிதனுமானவர் தன்னையே ஒரு அடிமையின் நிலைக்கு தாழ்த்தக்கூடிய அந்த பணிநிலை தான் மகத்துவமான செயல்.  இது எல்லா சாதாரண மனிதருக்கும் வந்துவிடாது. கடவுளையும் மனிதனையும் மையப்படுத்துகின்ற நபர்களால் மட்டுமே முடியும்.  குடவுளுடன் உள்ள உறவிலும் சக மனிதனுடன் உள்ள உறவிலும் நிலைத்து நீடித்து நிற்கின்ற மனிதனாலே இத்தகைய அளவுகடந்த அன்பு நிலைகளை பரிமாறிக் கொள்ள முடியும்.

அருள்பணி. S. எம்மானுவேல், நல்லாயன் குருத்துவக் கல்லூரி, கோவை.

New Rosary Prayers

சிலுவை அடையாளம்

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே – ஆமென்

நம்பிக்கை அறிக்கை

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியாரால் கருவுற்று தூய கன்னிமரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகம் சென்று எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார். தூய ஆவியாரை நம்புகிறேன். தூய கத்தோலிக்க திருச்சபையையும் புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலைவாழ்வை நம்புகிறேன்.– ஆமென்.

திருச்செபமாலை மறையுண்மைகள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்   (திங்கள், திருவருகை கால ஞாயிறு)

1. கபிரியேல் தூதர் அன்னை மரியாவுக்கு  தூதுரைத்தது
2. இறையன்னை எலிசபெத்தை சந்தித்தது
3. இயேசு பிறந்தது
4. இயேசுவை காணிக்கையாக்கியது
5. இயேசுவை ஆலயத்தில் கண்டடைந்தது

துயர்நிறை மறையுண்மைகள்  (செவ்வாய், வெள்ளி, தவக்கால ஞாயிறு)

1. இயேசு இரத்த வியர்வை சிந்தியது
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிபட்டது
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டது
4. இயேசு சிலுவை சுமந்து சென்றது
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு  இறந்தது

மகிமைநிறை மறையுண்மைகள்     (புதன், சனி, உயிர்ப்பு கால ஞாயிறு)

1. இயேசு உயிர்த்தெழுந்தது
2. இயேசுவின் விண்ணேற்றம்;
3. தூய ஆவியாரின் வருகை
4. அன்னையின் விண்ணேற்பு
5. இறையன்னை விண்ணக, மண்ணக  அரசியாக முடி சூட்டப்பட்டது

ஓளி நிறை மறையுண்மைகள் (வியாழன்)

1. யோர்தான் ஆற்றில் இயேசு  திருமுழுக்கு பெற்றது
2. காணாவூரில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது
3. இயேசு இறையரசை அறிவித்தது
4. இயேசுவின் உருமாற்றம்
5. இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது

இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல்
    
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
     எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை மன்றாட்டு

     அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிபெற்றவரே.
     தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.

மூவொரு இறைவன் புகழ்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக. தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக – ஆமென்.

ஓ எங்கள் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும் எல்லா வகையான சோதனை, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து உமது அருளுதவி யாருக்கு அதிகம் தேவையோ அவர்களையும் பாதுகாத்து வழிநடத்தும்   - ஆமென்

இறைவனின் தூதர்களான புனித மிக்கேலே, கபிரியேலே, இரபாயேலே: திருத்தூதர்களான பேதுருவே, பவுலே, யோவானே பாவிகளான நாங்கள் நம்பிக்கையுடன் மன்றாடின அன்னை மரியாவின் புகழ்மாலையான செபமாலையின் 53 மணி செபத்தையும் இறை அன்னையின் வல்லமை மிகுந்த பரிந்துரையில் நம்பிக்கை வைத்து மன்றாடி செபிக்கிறோம்.  ஆமென்

கன்னிமரியாவின் மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்…
கிறிஸ்துவே இரக்கமாயிரும்…
ஆண்டவரே இரக்கமாயிரும்…
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
                எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகினைமீட்ட திருமகனாகிய இறைவா …
தூய ஆவியாராகிய இறைவா….
மூன்று ஆள்களாயிருக்கும் ஒரே இறைவா…

புனித மரியே
              எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனின் அன்னையே
கன்னிகையான அன்னையே
இயேசுவின் அன்னையே
இறைஇரக்கத்தின் அன்னையே
மிகத்தூய்மையான அன்னையே
கற்புநெறி சிறந்த அன்னையே
பாவ மாசில்லா அன்னையே
கன்னித்தூய்மை மாறா அன்னையே
அன்புக்குரிய அன்னையே
நல்லாலோசனைதரும் அன்னையே
படைத்தவரின் அன்னையே
மீட்பரின் அன்னையே
இறைவிருப்பம் ஏற்ற அன்னையே
வணக்கத்திற்குரிய அன்னையே
மாண்பு மிகுந்த அன்னையே
அருள் சக்திநிறைந்த அன்னையே
இரக்கம் நிறைந்த அன்னையே
நம்பிக்கை மிகுந்த அன்னையே
இறை தர்மக்கண்ணாடியான அன்னையே
இறைஞானம் மிகுந்த அன்னையே
மனித மகிழ்ச்சியின் காரணமான அன்னையே
போற்றுதற்குரிய அன்னையே
சிறந்த பக்திமிகு அன்னையே
ரோஜாமலர் தன்மை கொண்ட அன்னையே
தாவீது அரச கோபுரமான அன்னையே
அதிசய கோபுரமான அன்னையே
அருள்மிகு ஆலயமான அன்னையே
உடன்படிக்கை பேழையான அன்னையே
விண்ணக வழியான அன்னையே
விடிவெள்ளியான அன்னையே
உடல்நலம் தரும் அன்னையே
அடைக்கலம் தருகின்ற அன்னையே
தேற்றுகின்ற அன்னையே
உதவிக்கரம் நீட்டும் அன்னையே
வானதூதர் வாழ்த்திய அன்னையே
குல முதுவர்களின் அரசியே
இறைவாக்கினர்களின் அரசியே
திருத்தூதர்களின் அரசியே
மறைசாட்சியர்களின் அரசியே
அருளுதவியாளர்களின் அரசியே
கற்புநெறி காக்கும் அரசியே
அனைத்து புனிதர்களின் அரசியே
அமல உற்பலியான அரசியே
திருச்செபமாலையின் அரசியே
எங்கள் சமாதான அரசியே
எங்கள் குடும்பத்தின் அரசியே
இந்திய நாட்டின் அரசியே

உலகின் பாவங்களைப் போக்கும் உன்னத இயேசு கிறிஸ்துவே
                 எங்கள் பாவங்களைப் போக்கியருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் உன்னத இயேசு கிறிஸ்துவே
                எங்கள் பிரார்த்தனைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் உன்னத இயேசு கிறிஸ்துவே
               எங்கள் மேல் இரக்கமாயிரும்

இறைவனின் புனித அன்னையே! இதோ உம்மை நாடிவந்தோம். எங்கள் தேவைகளில் எங்களைத் தள்ளிவிடாதேயும்;. மகிமை மிகுந்த அன்னையே, விண்ணுலகப் பேறுபெற்ற அரசியே, அனைத்துத் துன்பங்களிலிருந்தும் எங்களை என்றும் காத்தருளும்.

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதிபெறும்படி
இறைவனின் புனித அன்னையே, எங்களுக்காக மன்றாடும்.

செபிப்போமாக

இறைவா! உம் திருமுன் செப சிந்தனையுடன் கூடியுள்ள இக்குடும்பத்தைக் கண்ணோக்கி எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் பரிந்துரையால் பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்தும் எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.