FreeWebSubmission.com TO KNOW MORE.....: Marriage Mass (Lighting of the Lamp)

Marriage Mass (Lighting of the Lamp)


திருமணதிருப்பலி 

முன்னுரை(குத்துவிளக்குஏற்றல்)

கடவுளின் படைப்புத் திட்டத்தில் முதலில் “ஒளி தோன்றுக” என்றார். ஓளி தோன்றிற்று. ஆம்! கடவுள் வார்த்தையால் உலகை உருவாக்கினார்.    (…. முதல் திரி : பங்கு குரு)

அப்பொழுது கடவுள் மானிடரை நம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்குவோம். என்றார். மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் பின்பு ஆண்டவர் மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று அவனுக்கு தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். ஆகவே ஆண்டவர் மனிதனிடமிருந்து விலா எலும்பு ஒன்றை எடுத்து ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார். அப்போது மனிதன் ‘இதோ என் எலும்பின் எலும்பும்இ சதையின் சதையும் ஆனவள்’ என்றான்.  
                             ( 2ம் திரி : பெற்றோர் 1)

கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி ‘பலுகிப்பெருகி பூமியை நிரப்புங்கள்’ என்றார். இவ்வாறு கடவுள் முதல் குடும்பதை ஆசிர்வதித்துஇ உருவாக்கினார். (3ம் திரி பெற்றோர் 2) 

இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டு தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான் இருவரும் ஒரே உடலாய் இருப்பர். (மாற் 10:8 ) “இனி இவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல் எனவே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்”  
                          (4 ம் திரி மணமக்கள்). 

நீங்கள் பெற்றுக் கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி அமைதியுடன் இணைந்து வாழ்ந்து தூய ஆவியார் அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். (எபேசி 4 1-3). 

 உலகை உண்டாக்கி அதில் குடும்பத்தை உருவாக்கிய இறைவன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக திருமணத்தை ஒரு திருவருட்சாதனமாக உயர்த்தினார்.  
                          ( 5 ம் திரி திருப்பலி நிறைவேற்றும் குரு) 

தூய ஆவியார் வழியாக இறைவன் இன்றும் நம்மோடு இருந்து நம்மை நடத்துகிறார் என்பதை உணர்ந்தவர்களாய் நமது குற்றங்குறைகளை எண்ணி மனம் வருந்தி திருமண வாழ்வில் இணைய உள்ள இந்த மணமக்களுக்காக  இத்திருப்பலியில் பங்கேற்று செபிப்போம்.

No comments: