FreeWebSubmission.com TO KNOW MORE.....: New Rosary Prayers

New Rosary Prayers

சிலுவை அடையாளம்

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே – ஆமென்

நம்பிக்கை அறிக்கை

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியாரால் கருவுற்று தூய கன்னிமரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகம் சென்று எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார். தூய ஆவியாரை நம்புகிறேன். தூய கத்தோலிக்க திருச்சபையையும் புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். நிலைவாழ்வை நம்புகிறேன்.– ஆமென்.

திருச்செபமாலை மறையுண்மைகள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்   (திங்கள், திருவருகை கால ஞாயிறு)

1. கபிரியேல் தூதர் அன்னை மரியாவுக்கு  தூதுரைத்தது
2. இறையன்னை எலிசபெத்தை சந்தித்தது
3. இயேசு பிறந்தது
4. இயேசுவை காணிக்கையாக்கியது
5. இயேசுவை ஆலயத்தில் கண்டடைந்தது

துயர்நிறை மறையுண்மைகள்  (செவ்வாய், வெள்ளி, தவக்கால ஞாயிறு)

1. இயேசு இரத்த வியர்வை சிந்தியது
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிபட்டது
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டது
4. இயேசு சிலுவை சுமந்து சென்றது
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு  இறந்தது

மகிமைநிறை மறையுண்மைகள்     (புதன், சனி, உயிர்ப்பு கால ஞாயிறு)

1. இயேசு உயிர்த்தெழுந்தது
2. இயேசுவின் விண்ணேற்றம்;
3. தூய ஆவியாரின் வருகை
4. அன்னையின் விண்ணேற்பு
5. இறையன்னை விண்ணக, மண்ணக  அரசியாக முடி சூட்டப்பட்டது

ஓளி நிறை மறையுண்மைகள் (வியாழன்)

1. யோர்தான் ஆற்றில் இயேசு  திருமுழுக்கு பெற்றது
2. காணாவூரில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது
3. இயேசு இறையரசை அறிவித்தது
4. இயேசுவின் உருமாற்றம்
5. இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது

இயேசு கற்றுத்தந்த இறைவேண்டல்
    
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.
     எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

மங்கள வார்த்தை மன்றாட்டு

     அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிபெற்றவரே.
     தூய மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.

மூவொரு இறைவன் புகழ்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக. தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக – ஆமென்.

ஓ எங்கள் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும் எல்லா வகையான சோதனை, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து உமது அருளுதவி யாருக்கு அதிகம் தேவையோ அவர்களையும் பாதுகாத்து வழிநடத்தும்   - ஆமென்

இறைவனின் தூதர்களான புனித மிக்கேலே, கபிரியேலே, இரபாயேலே: திருத்தூதர்களான பேதுருவே, பவுலே, யோவானே பாவிகளான நாங்கள் நம்பிக்கையுடன் மன்றாடின அன்னை மரியாவின் புகழ்மாலையான செபமாலையின் 53 மணி செபத்தையும் இறை அன்னையின் வல்லமை மிகுந்த பரிந்துரையில் நம்பிக்கை வைத்து மன்றாடி செபிக்கிறோம்.  ஆமென்

கன்னிமரியாவின் மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்…
கிறிஸ்துவே இரக்கமாயிரும்…
ஆண்டவரே இரக்கமாயிரும்…
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
                எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகினைமீட்ட திருமகனாகிய இறைவா …
தூய ஆவியாராகிய இறைவா….
மூன்று ஆள்களாயிருக்கும் ஒரே இறைவா…

புனித மரியே
              எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனின் அன்னையே
கன்னிகையான அன்னையே
இயேசுவின் அன்னையே
இறைஇரக்கத்தின் அன்னையே
மிகத்தூய்மையான அன்னையே
கற்புநெறி சிறந்த அன்னையே
பாவ மாசில்லா அன்னையே
கன்னித்தூய்மை மாறா அன்னையே
அன்புக்குரிய அன்னையே
நல்லாலோசனைதரும் அன்னையே
படைத்தவரின் அன்னையே
மீட்பரின் அன்னையே
இறைவிருப்பம் ஏற்ற அன்னையே
வணக்கத்திற்குரிய அன்னையே
மாண்பு மிகுந்த அன்னையே
அருள் சக்திநிறைந்த அன்னையே
இரக்கம் நிறைந்த அன்னையே
நம்பிக்கை மிகுந்த அன்னையே
இறை தர்மக்கண்ணாடியான அன்னையே
இறைஞானம் மிகுந்த அன்னையே
மனித மகிழ்ச்சியின் காரணமான அன்னையே
போற்றுதற்குரிய அன்னையே
சிறந்த பக்திமிகு அன்னையே
ரோஜாமலர் தன்மை கொண்ட அன்னையே
தாவீது அரச கோபுரமான அன்னையே
அதிசய கோபுரமான அன்னையே
அருள்மிகு ஆலயமான அன்னையே
உடன்படிக்கை பேழையான அன்னையே
விண்ணக வழியான அன்னையே
விடிவெள்ளியான அன்னையே
உடல்நலம் தரும் அன்னையே
அடைக்கலம் தருகின்ற அன்னையே
தேற்றுகின்ற அன்னையே
உதவிக்கரம் நீட்டும் அன்னையே
வானதூதர் வாழ்த்திய அன்னையே
குல முதுவர்களின் அரசியே
இறைவாக்கினர்களின் அரசியே
திருத்தூதர்களின் அரசியே
மறைசாட்சியர்களின் அரசியே
அருளுதவியாளர்களின் அரசியே
கற்புநெறி காக்கும் அரசியே
அனைத்து புனிதர்களின் அரசியே
அமல உற்பலியான அரசியே
திருச்செபமாலையின் அரசியே
எங்கள் சமாதான அரசியே
எங்கள் குடும்பத்தின் அரசியே
இந்திய நாட்டின் அரசியே

உலகின் பாவங்களைப் போக்கும் உன்னத இயேசு கிறிஸ்துவே
                 எங்கள் பாவங்களைப் போக்கியருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் உன்னத இயேசு கிறிஸ்துவே
                எங்கள் பிரார்த்தனைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் உன்னத இயேசு கிறிஸ்துவே
               எங்கள் மேல் இரக்கமாயிரும்

இறைவனின் புனித அன்னையே! இதோ உம்மை நாடிவந்தோம். எங்கள் தேவைகளில் எங்களைத் தள்ளிவிடாதேயும்;. மகிமை மிகுந்த அன்னையே, விண்ணுலகப் பேறுபெற்ற அரசியே, அனைத்துத் துன்பங்களிலிருந்தும் எங்களை என்றும் காத்தருளும்.

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதிபெறும்படி
இறைவனின் புனித அன்னையே, எங்களுக்காக மன்றாடும்.

செபிப்போமாக

இறைவா! உம் திருமுன் செப சிந்தனையுடன் கூடியுள்ள இக்குடும்பத்தைக் கண்ணோக்கி எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் பரிந்துரையால் பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்தும் எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.

No comments: