FreeWebSubmission.com TO KNOW MORE.....: திருப்பலியும் சிலுவைப்பலியும்

திருப்பலியும் சிலுவைப்பலியும்

 

இந்தியாவில் பல்வேறு மதங்கள் உள்ளன. எந்த மதத்தை சார்ந்தவர்களாயினும் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய வண்ணம் கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதுää பலி செலுத்துவது இயல்பான ஒன்று. கடவுள் நம்பிக்கை கொண்டுள்ள எந்த நபரும் கடவுளுடன் உறவு கொள்ளää அருள்பெறää நன்றிசெலுத்த துணையாக உள்ளது திருவழிபாட்டுச் செயல்கள்;. திருமுழுக்க பெற்றுள்ள நாம் அனைவரும் திருப்பலியில் கலந்து கொண்டு இறையருள் பெறுகிறோம். ஏனெனில் திருப்பலிதான் மற்ற அனைத்து செயல்களிலும் சிறந்தää உயர்ந்த மன்றாட்டாக உள்ளது என்பதை திருவழிபாட்டு போதனைகளிருந்து அறிந்து கொள்கிறோம். சமீப நாள்களில் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்படக்கூடாது என மறைஆயர்களும்ää அரசு அதிகாரிகளும் திருப்பலியில் பங்கேற்க விலக்கு அளித்த நிலையில் பலருடைய ஏக்கம் ஞாயிறு திருப்பலி இல்லையேää இறைஉறவில் வாழ துணை இல்லையே என கூறக் கேட்டிருப்போம். இத்தகைய வலிமையுள்ள திருப்பலி கல்வாரி பலியின் மறுபலிää மறுநிகழ்வு. திருப்பலியின் மூலம் கடவுளுடனும் ஒருவர் மற்றவருடனும் உள்ள அன்புறவில்ää இறையுறவில் வளர துணைபுரிகிறது. இன்று நாம் கலந்துகொள்ளும் திருப்பலிக்கும் கல்வாரி மலையில் நிகழ்ந்த சிலுவைப்பலிக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள முயல்வோம்.


பலி என்பது என்ன?


இஸ்ராயேல் மக்களின் வாழ்வில் 5 வகையான பலிகள் இடம்பெற்றுள்ளது என்பதை விவிலியப் பகுதிகளை கூர்ந்து கவனிக்கும் போது தெரிந்து கொள்கிறோம். லேவியர் நூல் 1-7 வரை உள்ள பகுதிகளில் -எரிபலிää -நல்லுறவுக் காணிக்கைää -பாவக்கழுவாய்க்கான காணிக்கைää -தானியப்படையல்கள்ää -குற்றப்பழி நீக்கும் பலி எனும் ஐந்து வகையான பலிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எப்படிப்பட்ட பலியாக இருப்பினும் அனைத்து பலிகளுமே கடவுளுக்கு அருகாமையில் ஒரு நபரைää ஒரு குடும்பத்தை அழைத்து வருகின்ற நிகழ்வாகவே விவிலியம் சுட்டி காட்டுகிறது (லேவி 1:2). பல்வேறு பலிகள் மூலம் ஒரு நபர் புனித்தில் வளரää வாழää கடவுளுக்கு பணி புரியக்கூடிய நபர்களாக மாற்றப்படும் அழைப்பாக உள்ளது (லேவி 15.31). காயின் ஆபேல் காணிக்கை (தொநூ 4)ää நோவாவின் காணிக்கை (தொநூ 8:20-21)ää ஆபிரகாமின் பலி (தொநூ 12:7-8)ää இத்திரோவின் பலி (விப 18.12) என கடவுளுக்கு எரிபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினர். கடவுளுக்கென தனி பீடங்கள் அமைத்து காணிக்கைகளையும்ää பலிகளையும் செலுத்தினார்கள். ஏன் இத்தகைய பலிகள் நிறைவேற்றப்பட்டன அதன் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்ளவதற்கு முன்பாக இந்த வார்த்தைகளுக்கான விளக்கத்தை புரிந்து கொள்வோம்.

பலி / காணிக்கை

நாம் அடிக்கடி பயன்படுத்துகின்ற காணிக்கை என்ற சொல் இலத்தீன் மூலமொழியிலிருந்து வருவது (ழககநசந) ஒப்ரரே - கொடுத்தல்ää அர்ப்;பணித்தல் அல்லது தன்னிடமுள்ள ஒன்றை கொடுத்தல் என பொருள் கொள்ளலாம். அதேபோல பலி என்ற சொல் இரண்டு இலத்தீன் வார்த்தைகளின் கலவை (ளயஉநச 10 கயஉநசந) புனிதம்ää  செயல்படுத்து அல்லது செய் என்ற இந்த இரண்டு வார்த்தைகளின் கலவையே பலி என பொருள் கொள்ளப்படுகின்றது. புனிதப்படுத்தவதுää புனிதத்தை செயல்படுத்துவது பலி என பொருள்படும். அதே போல எபிரேய மொழியில் கோர்பான் என்ற சொல் காணிக்கை என்ற வார்த்தையை குறிப்பதாகவும்;ää செபா - என்ற சொல் பலி எனவும் பொருள் கொள்ளப்படுவதை அறியலாம். 


பழைய ஏற்பாடு

பலி / காணிக்கை என்ற வார்த்தைகளின் பொருளை அறிந்துகொண்ட நிலையில் விவிலியப்பகுதிதளi ஆராய்ந்து பார்க்கும் போது தான் இந்த வார்த்தைகளின் முழுமையான பொருளை உணர முடியும். மிகக் குறிப்பாக லேவியர் நூல் 3 மற்றும் 4ம் அதிகாரங்களை வாசிக்கும் போது இந்த பகுதிகளில் காணிக்கைகள் என்ற சொல்லும்ää லேவியா நூல் 1 மற்றும் 6ம் அதிகாரங்களை வாசிக்கும் போது பலி என்ற சொல்லும்; பன்படுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் ஒரே மாதிரியான பொருளை உணர்த்தக்கூடியதாக தென்பட்டாலும் இந்த இரண்டு சொற்களுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. காணிக்கை தன்னிடமுள்ள ஒன்றை கொடுத்தல்ää ஆனால் பலி என்பது விலங்குகளின் இரத்தத்;தைத் தெளித்துää எரிபலியாகää நறுமணமிக்க பலியாக கடவுளுக்கு அர்ப்பணமாக்குவது. காணிக்கையோ அல்லது பலியோ நிறைவேற்ற பழுதற்ற ஆடு கொல்லப்பட்டு எரிபலியாக நெருப்பிலிடப்பட்டு ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்பு பலியாகவும்ää செம்மறியாடு முழுவதையும் சுட்டெரிக்கும் எரிபலி ஆண்டவருக்கு இனிய நறுமணமிக்க நெருப்புப்பலியாகும் (லேவி 29.18). மாசு மறுவற்றää பழுதற்ற கிடாயாகவோää ஆடாகவோ இருக்கட்டும் (லேவி 3:6) என்பதே இஸ்ராயேல் மக்களின் பலியாக அமைந்தது. அதேபோல நல்லுறவுப்பலியாக அமைய கொல்லப்பட்ட ஆட்டின் இரத்தத்தை பலிபீடத்தின் மேல் தெளித்து ஆண்டவருக்கு பலி செலுத்தப்பட்டதை எரிபலி - நெருப்பாலான பலி ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப்பலி ஆகும் (லேவி 1:9) தானியப்படையல்கள் (லேவி 2.2) நல்லுறவுக் காணிக்கைகள் (லேவி 3:5) கடவுளுக்கு செலுத்தப்படும் பலி எனக் குறிப்பிடபட்டுள்ளதை காண முடிகிறது.

காணிக்கையாக இருந்தாலும் பலியானலும் கடவுளுக்கு அர்பணித்து நன்றியாகவோ நேர்ச்சையாகவோ கடவுளுக்கு செலுத்தினர். அதன் மூலம் கடவுளுக்கு ஏற்புடைய நபர்களாக திகழ்ந்தனர். எரிபலியாக நல்லுறவுப் பலியாக படைக்கப்பட்ட பின்பு உறவினர்களை அழைத்து உறவின் விருந்தில் கலந்து கொண்டு குடும்ப உறவினர்களோடும் இறைவனோடும் உள்ள உறவில் (தொநூ 31.54) வளர அழைக்கப்பட்டனர். நல்லுறவுப்பலி குடும்ப உறுப்பினர்கள் குழுவாக குடும்பமாக இணைந்து நிறைவேற்றினர். (1சாமு 20.6-28) அதேபோல இத்தகைய நல்லுறவுப்பலிகள் திருப்பயணத்தின்போதும் திருவிழா சமயங்களிலும் நிறைவேற்றப்பட்;டதை காணலாம்  (1 சாமு 1.21 2.19) இப்படிபட்ட பலிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிகழ்வுகளாக கொண்டாடப்பட்டன. குடும்பம் முழுவதும் ஒன்று சேர்ந்து மகிழ்சியை பகிர்ந்து கொண்டு ஒன்றாக கூடி பலிசெலுத்தி உணவை உண்டு உறவை உறுதிப்படுத்திக் கொண்டனர். அதேவேளையில் விலங்குகளின் இரத்தம் தெளிக்கப்பட்டு எரிபலி செலுத்தி இறைஉறவில் வளர முயன்றனர். ஏன் விலங்குகளின் இரத்தம் தெளிக்கப்பட்டது எனில் இரத்தமே உயிர் (இச 12.23 லேவி 17.11) எனவே விலங்குகளின் இரத்தத்தை செலுத்தி பலி நிறைவேற்றப்பட்டதை வரலாற்று பார்வையில் முக்கியத்துவம் பெறுகிறது. பழைய ஏற்பாட்டில் இறைவனுடன் ஒப்புரவாகவும் பாவ மன்னிப்பு பெறவும்ää அருள்வரங்களைப் பெறவும் இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதே பலி. பொதுவாக பலி கொடுப்பதற்கு ஒரு சோடி புறாக்கள் செம்மறி ஆடுகள் காளை மாடுகள் அல்லது மற்ற மிருகங்களை பலி இட்டனர். இன்னும் ஒருசில சமயங்களில் விளைச்சல் நிலத்தில் இருந்து பெறப்பட்ட தானியங்களும் விலங்குகளும் முழுவதுமாக எரிக்கப்பட்டு கடவுளுக்கு எரிபலியாகவும் பாவம் நீக்கும் பலியாகவும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

புதிய ஏற்பாடு

இயேசு ஆண்டவர் பாவ மாசு இல்லாத நிலையில் தன்னையே கடவுளுக்கு உகந்த பலியாக ஒப்புக்கொடுத்தார். (1 யோவான் 3.5). நாம் கிறிஸ்து வழியாக தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரை பாவநிலை ஏற்கச் செய்தார் (2 கொரி 5.21). புதிய ஏற்பாட்டில் இயேசு ஆண்டவர் தம்மையே முழுவதுமாக இறைவனுக்கு பலியாக்க கூடிய நிலையில் உலகின் பாவங்களை போக்கும் செம்மறியாகவும் குருவாகவும் பலிபீடமுமாகவும் திகழ்கின்றார் என்பதை விவிலியப் பின்னனியில் காண முடிகிறது. இயேசு ஆண்டவர் கல்வாரி மலைமேலே தமது உயிரை சிலுவையில் பலியாக்கியது மற்ற அனைத்து பலிகளையும் விட உயர்ந்த பலியாக உள்ளது. இயேசுகிறிஸ்து ஒரேஒருமுறை தம் உடலை பலியாக செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டுள்ளோம் (எபி 10.10). இதையே நாம் நற்கருணை பலி இயேசுவின் தியாகப்பலி திருப்பலி என கொண்டாடுகின்றோம்.

இயேசுவின் கல்வாரி பலி அனைத்து மக்களின் பாவம் போக்கும் பலி. இந்த சிலுவைப்பலியின் மூலம் இயேசு ஆண்டவர் தந்தையாம் இறைவனுக்கு முழுமையாக தம்மையே ஒப்புக்கொடுக்கிறார். உலக மக்களின் பாவங்களை போக்க கூடியதும் அனைவருக்கும் மீட்பை வழங்கக் கூடிய செயலுமாக அமைந்துள்ளது ஆண்டவர் இயேசுவின் கல்வாரி பலி. யேசு ஆண்டவர் தனது கல்வாரி பலியை நிறைவேற்றுவதற்கு முன் சீடர்களுடன் இறுதி இரவுணவு வேளையில் இதை என் நினைவாக செய்யுங்கள் என சொல்லி நற்கருணை பலியை நினைவு கூர்ந்து கொண்டாட மீண்டும் மீண்டும் இந்த கல்வாரி பலியை கொண்டாடுவதன் மூலம் ஆண்டவர் இயேசு ஏற்படுத்திய மீட்பின் வழியில் பயணம் செய்யக்கூடிய ஆற்றலை நாம் அடைந்து கொள்ள துணைபுரிகிறது. 

திருப்பலியும் கல்வாரிப் பலியும்

நாம் ஒவ்வொரு முறையும் திருப்பலியில் கலந்துகொள்ளும் போது யேசுவின் முன்னிலையில் கூடிவருகிறோம். அதுபோல கல்வாரி பலியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுகிறோம். அன்று கல்வாரியில் நிகழ்ந்த அதே பலி ஒவ்வொரு திருப்பலியிலும் நிகழ்கிறது. கல்வாரி பலி இரத்தம் சிந்தி நிறைவேற்றப்பட்டதுää ஆனால் திருப்பலி இரத்தம் சிந்தாத நிலையில் நிறைவேற்றப்படும் பலியாகும். எனதே தான் பவுல் அடியர் இப்படி குறிப்பிடுகிறார் கடவுளுக்கு உகந்தää தூயää உயிருள்ள பலியாக உங்களை படையுங்கள் (உரோ 12.1) கிறிஸ்து உங்களுக்காக தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்ககையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்பு கூர்ந்தது போல நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள் (எபே 5.2) எனவும் இயேசு கிறிஸ்துவின் வழியாக கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளை படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக (1 பேதுரு 2.5) என பேதுருவும் குறிப்பிடுகிறார். 

கல்வாரி பலியும் திருப்பலியும் இருவகையான பலிகளானாலும் நம்மை கடவுளுடன் உறவு கொள்ளக்கூடிய வகையில் இணைக்கக்கூடிய வல்லமை கொண்டதாக உள்ளது. கல்வாரிப் பலியை மையப்படுத்திய அருள் அடையாளப்பலியே திருப்பலி. அருள்அடையாளக் கொண்டாட்டத்தில் குறிப்பாக திருப்பலியில்; அருள்பணியாளர் மறுகிறிஸ்துவாக செயல்படுகிறார் பலி நிறைவேற்றுகின்றார் (எபி 4.14) எனவே தான் ஒவ்வொரு திருப்லியிலும் அருள்பணியாளரோ ஆயரோ சகோதர சகோதரிகளே என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாட அழைப்பு தருகிறார். அதோடு முதல் நற்கருணை மன்றாட்டில் ஆண்டவரே உமது விண்ணகத்தூதர்கள் இக்காணிக்கைகளை உமது விண்ணகத்திருப்பீடத்திற்கு எடுத்துசெல்ல வேண்டுமென வேண்டுதல் புரிகிறார். தந்தையாம் இறைவன் தன் ஒரே மகன் யேசுவை நமக்காக பாவ உருவாக்கினர் (2 கொரி 5.21). கல்வாரி மலையில் இயேசு ஆண்டவர் தந்தையே என் ஆவியை உமது கையில் ஒப்படைக்கிறேன் (லூக் 23.46) என மன்றாடினார். காரணம் சிலுவையில் தனது உயிரைத் தியாகம் செய்த ஆண்டவர் தந்தையாம் இறைவனின் கரத்தில் ஒப்புக்கொடுத்தார். அதேபோல திருப்பலியில் அருள்பணியாளரின் கைகளிலிருந்து தந்தையாம் கடவுளுக்கு அர்ப்பணமாக்குகிறார். சிலுவைப்பலியும் திருப்பலியும் ஒரே பலி. கூட்டுவதோ குறைப்பதோ அல்ல. ஓரே இயேசு ஓரே பீடம்ää ஓரே பலி. இயேசுவே செம்மறியாக பலியானார்ää கல்வாரியில் தனது உயிரைத்தந்தார்.

திருப்பலி நமது பலி

திருப்பலியில் பயன்படுத்தப்படும் மெழுகுதிரி ஒளியாகிறது கோதுமை அப்பம் இயேசுவின் உடலாகிறது திராட்சை இரசம் இயேசுவின் இரத்தமாகிறது. அதே நிலையில் திருப்பலியில் நம்மையே பலி பொருளாக ஒப்புக்கொடுக்கும் வாய்ப்பைத் தருகிறார். நமது கவலை வேதனைää துன்பம் துயரம் வருத்தம் மகிழ்சி நமது இயலாமை நமது குடும்பம் வேலை அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பாதத்தில் அர்ப்பணிக்கும் ஆற்றலைத்த் தருகிறார். நமது வாழ்வையே தந்தையாம் இறைவனுக்கு ஆண்டவர் இயேசுவின் கல்வாரி பலியோடு அர்ப்பணமாக்கும் ஆற்றலைத்  திருப்பலி தருகிறது. ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொண்டு திருமுழுக்கு பெற்றுள்ள நாம் அனைவரும் இயேசுவின் கல்வாரிப் பாடுகளிலும் பங்கேற்கிறோம்;. திருப்பலி எனும் அருள் அடையாளக் கொண்டாடத்தின் மூலம் ஆண்டவர் இயேசுவவுடன் பயணம் செய்யவும் பங்கேற்கவும் அருள் தருகின்றார். எனவே தான் திருப்பலியில் பயன்படுத்தப்படும் அனைத்து மன்றாட்டுகளும் ஆண்டவர் இயேசுவுடன் இணைந்து தந்தையாம் இறைவனுக்கு செலுத்தப்படுகின்ற மன்றாட்டாக அமைந்துள்ளது. ஆண்டவர் இயேசு இறைவார்தையிலும்ää அப்ப இரசத்திலும்ää திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியிலும் நம்பிக்கை கொண்ட திருக்கூட்டத்திலும் செயல்படுகிறார். ஏனவெ கல்வாரி பலியும் திருப்பலியும் ஒரே பலி. இயேசு தம்மையே தந்தையாம் இறைவனுக்கு அர்பணித்தார். திருப்பலி அருள் அடையாளக் கொண்டாட்டத்தில் மறுகிறிஸ்துவாக இருந்த செயல்படுகின்ற அருள்பணியாளர் கையில் அப்ப இரச வடிவில் தந்தையாம் இறைவனுக்கு அர்ப்பணமாக்குகிறார். இயேசுவே பலி நிவேற்றுகிறார் பலிபொருள். நம்பிக்கையாளர் இறைவனுடனும் அடுத்தவருடனும் உள்ள உறவு ஒன்றிப்பில் வாழ செயல்பட தமது உடலையே இரத்தத்தையே உணவாக வழங்குகிறார். அனைத்துலகினரின் வாழ்வை உறுதி செய்ய திருப்பலியில் பலியாகுகின்றார். எனவே சிலுவைப்பலியும் திருப்பலியும் ஒன்றே. காரணம் ஒரே  பீடம் ஒரே பலி ஒரே இயேசு.

No comments: