FreeWebSubmission.com TO KNOW MORE.....: கத்தோலிக்க திருஅவையில் அன்னை மரியா

கத்தோலிக்க திருஅவையில் அன்னை மரியா

 

      கத்தோலிக்க திருஅவையின் செயல்பாடுகளில் மிகவும் குறிப்பிடக்கூடியதும் நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் சிறந்த ஒரு பக்திமுயற்சி அன்னை மரியாவுக்கு செலுத்தப்படுகின்ற பக்தி. சமீப நாள்களில் சில பிரிந்த சபையினர் அன்னை மரியாவின் பக்தியை குறித்து சரியான புரிந்துணர்வு இல்லாமையால் குறைகூறி வருவதும் உண்டு. கத்தோலிக்க திருஅவையின் வாழ்வில் முக்கியத்துவம் பெறுவது திருவிவிலியம் மற்றும் திருஅவையின் மரபு. ஆனால் பிரிந்த சபையினர் திருவிவிலியத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றனர்;ää திருஅவையின் மரபு நிலைகளை ஏற்றுக்கொள்வதில்லை எனவேதான் தொடர் தாக்குதலும்ää கத்தோலிக்க நம்பிக்கையாளர்களை குழப்புவதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. திருஅவையின் மரபு தொடக்க கால கிறிஸ்தவர்கள் எப்படியெல்லாம் இறைமகன் இயேசுவை ஆராதித்தனர்ää கடவுளை வழிபட்டனர்ää கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்தனர் என்ற நடைமுறை செயல்பாடுகளை மையப்படு;த்தியது. இவைகளை திருஅவையின் திருவழிபாட்டு செயல்கள் மற்றும் திருஅவையின் போதனையிலிருந்து உணர முடியும்.


1. திருவிவிலியம்


    கடவுளின் அன்பையும்ää இயேசுவின் மீட்பையும்ää தூய ஆவியாரின் வழிநடத்துகின்ற நிலைகளையும் விவிலியத்தின் பல பகுதிகள் மையப்படுத்துகின்றன. ஆனால் அன்னை மரியாவைக் குறித்த சிந்தனைகளை அதிகமாக விவிலியத்தில் காணமுடியாது. பழைய ஏற்பாட்டு பகுதிகள் இறைவனது அன்பைää பாதுகாப்பைää பராமரிப்பை மையப்படுத்தியுள்ளது. புதிய ஏற்பாட்டு பகுதிகள்  இயேசுவின் வாழ்வுää போதனைää புதுமைகள் இவைகளை மையப்படுத்தி உள்ளது மற்றும் இயேசுவின் பணிää செயல்பாடுகள். புதுமைகள்ää இறையாட்சியின் நிலை குறித்து காணமுடிகிறதுää ஆனால் அன்னை மரியாவின் வாழ்வையும் செயல்பாடுகளையும் தெரிந்து கொள்ள கூடிய வகையில் திருவிவிலியப் பகுதிகளை புரட்டி பார்க்கும் போது நமக்கு குறைந்த சான்றுகளே உள்ளன. அவைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. பழைய ஏற்பாட்டு பகுதிகள் அன்னை மரியாவை நேரடியான நிலையில் குறிப்பிடுவதில்லை ஆனால் சற்று கூர்ந்து நோக்கினால்; தான் அன்னை மரியாவின் ஈடுபாட்டை உணர முடியும். குறிப்பாக

- தொடக்கநூல் 3.15  உனக்கும் பெண்ணுக்கும்ää உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையை காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்.

- எசாயா 7.14 ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ கருவுற்று இருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண்மகனை பெற்றெடுப்பார்.

- மீக்கா 5.2 நீயோ பெத்தலேகேமேää யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய் ஆயினும் இஸ்ராயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.

இந்த பழைய ஏற்பாட்டு பகுதிகள் புதிய ஏற்பாட்டில் உள்ள இறைவனின் மீட்புத் திட்டத்துடன் இணைத்து வாசிக்க முயன்றால்தான் இந்த பகுதிகளில் மறைந்துள்ள அன்னை மரியாவை கண்டு கொள்ள வேண்டும். ஆனால் புதிய ஏற்பாட்டில் உள்ள ஒரு சில பகுதிகளை கவனிக்கின்ற போது அன்னை மரியா இறைவனின் மீட்புப் பணியில் நேரடி தொடர்பு கொண்டு செயல்படுவதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

- மாற்கு நற்செய்தியில் அதிக முக்கியத்துவம் பெறுவது இயேசுவின் பாடுகள்ää மரணம்ää உயிர்ப்பு எனவே அன்னை மரியாவைப்பற்றிய குறிப்புகளில்; 3. 31-35 ல் யார் என்னுடைய தாய்ää யார் என்னுடைய சகோதரர் எனவும் 6.1-6 ல் இவர் தச்சன் மகன் அல்லவாää மரியாவின் மகன்தானே என்ற குறிப்புகளை காணமுடிகிறது. மாற்கு நற்செய்தியாளர் மையப்படுத்த விரும்பிய இயேசுவின் பாடுகளைää மரணத்தை அடிகோடிட்டு காட்டுகிறார். எனவே அன்னை மரியாவை அதிகமாக மையப்படுத்தவில்லை என்பதை அறிய முடிகிறது.

- மத்தேயு நற்செய்தியில் அன்னை மரியா கடவுளால் தனிப்பட்ட முறையில் தேர்ந்து கொள்ளப்பட்டவர் என்பதை வெளிப்படுத்துகிறார். 1-2 பகுதிகளில் இயேசுவின் பிறப்போடு தொடர்புள்ள அன்னைமரியாவின் செயல்பாடுகளை காணலாம். மற்றும் 12.46-50 யார் என் தாய்? யார் என் சகோதரர்?. 13.53-55 இவர் தச்சருடைய மகன் அல்லவாää மரியாவின் மகன் தானே எனும் குறிப்புகளை காணமுடிகிறது. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னை மரியா கடவுளை முதன்மை படுத்தி வாழ்ந்தவர் என்பதை குறிப்பிட்டு கூறமுடியும்.

- லூக்கா நற்செய்தியில் அன்னை மரியா கடவுளின் விருப்பத்தை ஏற்று செயல்பட்டவர் என்பதை தெளிவாக குறிப்பிட்டு உணர்த்துகி;றார். இயேசுவின் பிறப்பின் முன்னறிவிப்பு - 1.26-36ää மரியா எலிசபெத்தை சந்தித்தல் - 1.39-45ää மரியாவின் பாடல் - 1.46-56 போன்ற இந்த விவிலியப் பகுதிகளை கூர்ந்து நோக்கும் போது கபிரியேல் வானதூதர் அன்னைமரியாவுடன் உரையாடல் நடத்துகின்றார்ää கடவுளே அன்னைமரியாவை அருள்மிகப் பெற்றவரேää ஆண்டவர் உம்முடன் இருக்கிறார் என வாழ்த்துகிறார். கடவுள் பார்வையில் மதிப்பு மிகுந்த மற்றும் அருள்மிகுந்த நபராக அன்னை மரியாiவை லூக்க நற்செய்தியாளர் அடையாளப்படுத்துகிறார். மேலும் 8.19-21 உம் தாயும் சகோதரர்களும் உம்மை பார்க்க விரும்பி வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள் என்ற குறிப்பை கவனிக்கும் போதும் அன்னை மரியா ஆண்டவர் இயேசுவுடன் பயணித்தவர் என்பதை காணமுடிகிறது.

- யோவான் நற்செய்தியாளர் இயேசுவை மீட்பராகவும்ää இயேசுவால் மட்டுமே புதுவாழ்வை வழங்கமுடியும் என்ற எண்ணங்கள் மிளிர்ந்து காண முடிகிறது. 2.1-11 காணாவூர் திருமண நிகழ்சிää 19.25-29 கல்வாரி சிலுவையடியில் அன்னைமரியா இந்த பகுதிகளை வாசிக்கும் போது யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் தாய் எனவும்ää ஆண்டவர் இயேசுவின் இறுதி மரணம் வரை பயணித்தவர் அன்னை மரியா என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

- கலாத்தியர் 4.4 கடவுள் தம் மகனை பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்

- திருவெளிப்பாடு 12.1 வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது பெண் ஒருவர் காணப்பட்டார். கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார். நிலா அவருடைய காலடியில் இருந்தது. அவர் 12 விண்மீன்களை தலைமீது சூடியிருந்தார். இங்கே பெண்ணும் அரக்கப் பாம்பும் ஒப்புமை படுத்தப்படுகிறது.


மேலே குறிப்பிடப்பட்ட இந்த புதிய ஏற்பாட்டு பகுதிகளை பார்க்கும்போது அன்னை மரியாவைப் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே இருந்தாலும் இவைகள் சுட்டிகாட்டுகின்ற உள்ளாந்த உண்மைகளைää கருத்துக்களை புரிந்து கொள்ள தூய ஆவியாரின் வல்லமை பெற்ற நபரால் தான் முடியும். காரணம் அன்னை மரியா தூய ஆவியாரின் வல்லமை நிரம்ப பெற்ற நபர் என்றும் இயேசுவின் தாய் என்றும் நற்செய்தி பகுதிகள் நமக்கு தெளிவு படுத்துகின்றன. கடவுள் பார்வையில் மதிப்பு மிகுந்த நபராக அன்னை மரியாவை நற்செய்தியாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர்.

திருஅவையின் மரபு

கத்தோலிக்க திருஅவையின் மரபுää பாரம்பரிய செயல்பாடுகள் மற்றும் கடைபிடிக்கப்பட்டு வந்த செயல்கள் தூய ஆவியாரிடமிருந்தே வருகின்றது என்பதை இங்கே உணருவது நல்லது. இவைகளை விவிலியத்தில் காணமுடியாதுää இருப்பினும் திருஅவையின் வாழ்வில்ää தொடக்க கால கிறிஸ்தவர்களின் வாழ்வில் மற்றும் அவர்களது நடைமுறை செயல்பாடுகளில் கண்டுகொள்ள முடியும். மிகக்குறிப்பாகää தொடக்க கால கிறிஸ்தவர்கள் எப்படி கடவுளைää இயேசுவை ஆராதித்தனர் என்றும் கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்தனர் என்பதை நாம் அறிந்து கொள்ள ஒருசில சான்றுகளை கூர்ந்து கவனிக்கும்போது

- ஆயர் போலிகார்ப் (135) வேதசாட்சியம் குறித்த குறிப்புகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. இயேசுவை ஒருநாளும் மறுதலிக்க முடியாது பிற கடவுள்களை ஆராதிக்கவும் முடியாது. ஆனால் மறைசாட்சிகள் இயேசுவுக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்தவர்கள். அன்னை மரியா இயேசுவின் தாய் எனவே அன்னைமரியாவுக்கு ஏற்புடைய அன்பைää வணக்கத்தைää மரியாதையை வெளிப்படுத்த வேண்டும் என்பதை குறிப்பிடுகிறார்.

- 2ம் நூற்றாண்டை சார்ந்த பிரிசில்லா குகைக்கல்லறையில் அன்னைமரியா குழந்தை யேசுவை தனது மடியில் தாங்கி பிடித்துள்ளதைப் போன்ற ஓவியம் தொடக்க கால கிறிஸ்தவர்கள் அன்னை மரியாவுக்குரிய தங்கள் வணக்கத்தைää மரியாதையைää பக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்; என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

- யாக்கோபின் நற்செய்தி:  நற்செய்திகளுக்கு முன்பு இருந்த இந்த நற்செய்தியில் தான் அன்னை மரியாவின் பெற்றோhகள்; சுவக்கின் மற்றும் அன்னம்மா என்றும் அன்னை மரியாவின் பிறப்புää இளமைப்பருவம் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.

- உரோமை நகர ஹிப்போலிடஸ் (3 ம் நூற்றாண்டு) அன்னை மரியாவுக்கு கொடுக்கப்பட்ட உயர் வணக்கத்திற்கான சுதந்திரம் இருந்ததாக குறிப்பிடுகின்றார். எனவேதான் புனித அம்புரோஸ் மிலான் நகர ஆயராக நியமிக்கப்பட்டபோது அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தி மிலான் நகரின் ஆயராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதை காணமுடிகிறது.

- எபேசு நகரத்திருச்சங்கம் (431) அன்னைமரியா கடவுளின் தாய் என்ற உண்மையை ஏற்று அறிக்கை செய்தபின் அன்னை மரியாவின் பெயரால் பல பெரிய ஆலயங்கள் உருவாயின. 5ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அன்னை மரியாவின் பெருங்கோவில் உரோமையில் உள்ளது. இதுவே கத்தோலிக்க திருஅவையில் அன்னை மரியாவின் பெயரால் உருவாக்கப்பட்ட முதல் ஆலயம். அதன்பிறகு 6 மற்றும் 7ம் நூற்றாண்டுகளில் அன்னை மரியாவின் பெயரில் பல ஆலயங்கள் உருவாயின மற்றும் பக்தி செயல்களும் இடம் பெறலாயின.

- 1208 புனித தோமினிக் அன்னை மரியாவிடம் பெற்ற காட்சியில் செபமாலையை பெற்றுக் கொண்டதாக அறிகிறோம். தொடக்க காலத் திருஅவையில் இருந்த 150 திருப்பாடல்களை பாடி செபித்ததைப் போன்று கபிரியேல் தூதர் அன்னை மரியாவை வாழ்த்தி சொன்ன புகழ்ச்சியை மையப்படுத்திய செபமாலை பக்தி உலகின் அனைத்து பகுதிகளிலும் தோமினிக்கன் சபையைச் சார்ந்த துறவிகள் பரப்பினர்.

- 1251 புனித சைமன் ஸ்தாக் கார்மேல் மலையில் அன்னை மரியாவின் காட்சியை கண்டவர். அன்னை மரியா அந்த காட்சியில் உத்தரியத்தை அணிந்து கொள்;பவர்கள் நரக நெருப்பிலிருந்து காக்கப்படுவார்கள் என்பதை கார்மேல் சபை துறவிகள் அதிகமாக வலியுறுத்தி உத்தரியம் அணியும் பழக்கம் கத்தோலிக்க திருஅவையில் உருவானது.

- 1531 குவதலூப் நகரில் அன்னை மரியாவின் காட்சி மற்றும் சலேத் நகர்ää லூர்து நகர்ää பாத்திமா நகர் போன்ற இடங்களில் அன்னை மரியா காட்சி மூலம் உலகம் அனைத்தும் மனம் மாறவும் செபமாலையை செபித்து உடலிலும் உள்ளத்திலும் நலம் பெற்றுக்கொள்ள கூடிய அளவில் அன்னை மரியாவின் புதுமைகள் உலகம் முழுவதும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.


    இந்த வரிசையில் அன்னை மரியாவின் பெயரில் இன்று திருஅவையில் ஏறக்குறைய 1600க்கும் மேற்பட்ட பெயர்களில் அன்னை மரியாவை அழைப்பதும்ää விழா கொண்டாடுவதும் நடைமுறையில் உள்ளன. காரணம் அன்னை மரியாவின் பக்தி வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதுதான். ஏறக்குறைய 19ம் நூற்றாண்டுகளில் அன்னை மரியாவின் பக்திமுயற்சிகள் கத்தோலிக்க திருஅவையில் அதிகரித்தன. திருத்தந்தையர்கள் குறிப்பாக புனித 12ம் பயஸ்ää புனித 6ம் பால்ää புனித இரண்டாம்; ஐhன் பவுல் அன்னை மரியாவின் பக்திமுயற்சிகளை திருஅவை முழுவதும் பரப்பவும்ää அனைத்து கத்தோலிக்கரும் கடைபிடிக்கவும் வலியுறுத்தினர். அதோடுää பல்வேறு புதிய விழாக்களும் பக்தி முயற்சிகளும் உருவாயின. குறிப்பாக கன்னி மரியா அரசி (1954) மே மாத வணக்கமாதம் (1965)ää செபமாலை பக்தி (1974)ää ஒளியின் மறையுண்மைகள் (2002);ää அன்னை மரியா திருஅவையின் தாய் (2018) என்பன குறிப்பிடத் தக்கவை. இத்தகைய பக்தி முயற்சிகள் மூலம் அன்னை மரியாவின் பரிந்துரையை அனைத்து கத்தோலிக்க மக்களும் உணர முடியும் எனத் திருஅவை கற்பிக்கிறது.


திருஅவையின் போதனையில்

    

    இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1965) குறிப்பாக திருஅவை தொகுப்பு எண் 66ல் குறிப்பிடுவதுää அன்னை மரியா அனைத்து வானதூதர்களையும் விட உயர்ந்தவர். இயேசுவுக்கு அடுத்த நிலையில் கடவுளின் மீட்புத்திட்டத்தில் சிறந்த பங்கு வகிப்பவர். எனவேதான் அன்னை மரியாவுக்கு உயர் வணக்கம்ää இது கடவுளை ஆராதிப்பதிலிருந்து வேறுபடுகிறது. ஆண்டவர் இயேசுவை முழுமையாக பின்பற்ற தேவையான தாயன்புடன் பரிந்துபேசி மன்றாடுகிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது.

    கத்தோலிக்க திருஅவைச் சட்டம் எண் 1186 இறைமக்களின் புனிதத்தை ஊக்குவிக்கும் படியாக அனைவருக்கும் தாயாக கடவுளால்; ஏற்படுத்தப்பட்ட அன்னை மரியாவிடம் தனிச்சிறந்த மற்றும் பிள்ளைகளுக்குரிய வணக்கத்தை வெளிப்படுத்த திருஅவை இறைமக்களை தூண்டுகிறது.

கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி எண் 1161 திருவழிபாட்டு கொண்டாட்டத்தின் எல்லா அடையாளங்களும் கடவுளின் தாயான அன்னை மரியாää புனிதர்கள் அனைவரும் ஆண்டவர் இயேசுவுடன் தொடர்பு உள்ளவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

- அனைத்து கிறிஸ்தவர்களின் தாய் திருத்தந்தை 6ம் பால் 1944.

- விண்ணக மண்ணக அரசிää திருத்தந்தை 9ம்ää 12 பத்திநாதர் 1954

- உடன் இரட்சகிää திருத்தந்தை 10ம் பத்திநாதர்ää

- இணைப்பாளர்ää திருத்தந்தை 12ம் பத்திநாதர்ää 1954.

- மே வணக்கமாதம்ää திருத்தந்தை 6ம் பவுல்ää 1965.

- அன்னை மரியாவின் பக்திää 6ம் பவுல்ää 1974.

- மீட்பரின் அன்னைää திருத்தந்தை 2ம் அருள்சின்னப்பர்ää 1987.

- அன்னை மரியாவின் திருச்செபமாலைää 2ம் அருள்சின்னப்பர்ää 2002.


திருஅவையின் போதனைகளில் சிறந்த 4 மறைக்கோட்பாடுகள்

1. கடவுளின் தாய்..431.. எபேசுநகர திருச்சங்கம்

2. என்றும் கன்னி.. 649.. லாத்தரன் திருச்சங்கம்

3. அமல உற்பவி ...1854.. திருத்தந்தை 9ம் பத்திநாதர்

4. அன்னையின் விண்ணேற்பு..1950.. திருத்தந்தை 12ம் பத்திநாதர்


அன்னை மரியாவைக் குறித்த சிந்தனைகளை விவிலியப் பின்னனியிலும்ää திருஅவையின் மரபிலும்ää திருஅவையின் போதனையிலும் உற்று நோக்கும் போது இந்த உண்மைகளை தெளிவாக அறிய முடிகிறது. அன்னை மரியா கடவுளின் விருப்பத்திற்கு அடிமை எனத் தங்களையே அர்ப்பணித்து செயல்பட்டதன் வழியாக பல வழிகளில் அன்னை மரியாவுக்கு கொடுக்கப்படும் வணக்கம் இன்றும் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. கத்தோலிக்க திருஅவையில் இடம் பெறும் அன்னை மரியாவின் வணக்கத்தை யாரும் தவறாக கருதக் கூடாது காரணம் கடவுளே கபிரியேல் வானதூதர் மூலம் அன்னை மரியாவை வாழ்த்தினார் அப்படியெனில்; இயேசுவை பின்பற்றுகின்ற ஒவ்வொருவரும் அன்னை மரியாவை ஏற்றுக்கொள்ளவும்ää உயர்ந்த மரியாதையும் வணக்கமும் செலுத்துவதை குறித்து சரியான புரிதலை உருவாக்கி கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்வது மிகவும் வரவேற்புக்குரியது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அன்னை மரியாவை கடவுளாக பார்பதில்லை மாறாக இறைவனின் மீட்புத்திட்டத்தில் சிறப்பு பங்கு வகிப்பதால் அன்னை மரியாவுக்கு உயர் வணக்கம் கொடுக்கின்றனர். பிறகு ஏன் பிரிந்த சபையினர் அன்னை மரியாவை ஏற்றுக்கொள்வதில்லை என்ற கேள்வி உதயமாகலாம். ஏதாவது ஒரு வகையில் வேறுபட்டு இருக்க வேண்டும் என்பதிலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களை குழப்ப வேண்டும் என்ற மனநிலையில் செயல்படுபவர்கள் பலர் உண்டு. எனவே தான் தங்களுக்கு சாதகமானவைகளான  பத்தில் ஒரு பங்கு காணிக்கைää இறைவார்த்தை பகிர்வுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் போன்ற போதனைகளை அதிகமாக மையப்படுத்தவும் அன்னை மரியாவை குறித்தும்ää திருஅவையின் மரபுää போதனைää கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்ää அதே போல அன்னை மரியாவுக்கு செலுத்தப்படும் உயர் வணக்கத்தை புரிந்து கொள்ளும் ஆற்றலும் அவர்களுக்கு இல்லை என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. கத்தோலிக்க நம்பிக்கையை வெளிப்படுத்தி அன்னை மரியாவை ஏற்றுக்கொண்டு பக்தி முயற்சிகளை கடைபிடிக்கும் போது புனித பெர்னார்து குறிப்;பிடுவது போன்று அன்னை மரியாவை நம்பி வந்தவர்கள் எவரும் வெறுமையாக செல்ல முடியாது. இத்தகைய வல்லமைமிகுந்த பரிந்துரையை அன்னை மரியாவின் திருத்தலங்களுக்கும்ää ஆலயங்களுக்கும் சென்று கவனித்தால் தான் உணரமுடியும். இயேசுவை மையப்படுத்தää இறைவல்லமையை மையப்படுத்தி வாழ அன்னை மரியா சிறந்த மாதிரி.

No comments: