இந்த ஆண்டு 2015 செப்டம்பர் மாதம் ஜலன் குர்டி என்ற 3 மாத குழந்தை இறந்து முகம் கவிந்த நிலையில் துருக்கியில் உள்ள கடற்கரை ஒன்றில் கிடந்தது. இந்த படத்தை நிறைய பத்திரிக்கைகளில் மற்றும் சமூக வளைதளங்களிலிலும் வெளிவந்ததை நாம் அனைவரும் அறிவோம். பலர் இதைக் கண்டு உருக்குழைந்து போயினர். தீவிரவாதம் மற்றும் கொடுமையினால் பாதிக்கப்படுவோர் முதலில் குழந்தைகளே.
கிறிஸ்து பிறப்பு என்பது வெறும் கிறிஸ்மஸ் தாத்தா, மரம் அல்லது குடில் மட்டுமல்ல மாறாக நமது உள்ளம் கடவுளை பிறக்கச் செய்யும் இடமாக மற்றுவதே. எப்படி எனது சிறுசிறு உதவி, அன்பு, கீழ்படிதல், ஏற்றுக்கொள்ளுதல், மகிழ்சியை உருவாக்குதல், இல்லாதவருடன் பகிர்ந்து கொள்ளுதல் இவற்றை செய்ய மனத்துணிவு வேண்டும். இவைதான் மனிதனிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவை தவிர மிருகத்தனமான செயல்களான பிளவுகள், வன்முறைகள், சண்டைகள் இவற்றை மையப்படுத்தினால் எனக்கு யேசுவின் பிறப்பு அர்த்தமில்லாத ஒரு கொண்டாட்டமே.
திறந்த உள்ளத்தோடு இயேசு பிறந்த குடிலருகே செல்லும் போது அந்த இயேசு பாலன் நமக்கு தெரிவிப்பது எளிமை, தூய்மை, அன்பு, அடுத்தவரை மதித்தல், தன்னலமில்லாமை போன்ற பண்புகள்தான். இவற்றை வாழ்வதும் கடைபிடிப்பதும் கடினம் ஆனால் மிக எளிதானது என்னவெனில் சண்டை, பகைமை, வெறுப்பு தான்.. கிறிஸ்துவின் பிறப்பு மகிழ்சியின் விழா, அன்பின் விழா, ஒற்றுமையின் விழா, உறவின் விழா, ஒளியின் விழா. கடவுளது அன்பின் முழுமையை வெளிக்கொணர்வதே மாட்டுக் தொழுவம் தான். அப்படியெனில் குடில் நோக்கி, அன்பை நோக்கி வருவோம் ஒளியை ஏற்றும் உறுதி பெறுவோம்.. குழந்தையை யாரும் வெறுப்பதில்லை ஏனென்றால் அன்பை வெளிப்படுத்தும் உறவின் சின்னமாக திகழ்கிறது. இயேசுவின் பிறப்பு அன்பின் புரட்சி, கனிவின் புரட்சி, உறவின் புரட்சி, ஒற்றுமையின் புரட்சி. நாம் எத்தகைய புரட்சியை உருவாக்க இருக்கிறோம் எதற்காக…
No comments:
Post a Comment