டிசம்பர் மாதமென்றாலே சற்று குளிர் நடுக்கம் இருப்பது இயற்க்கையின் நிலை. அதோடு நமது நினைவிற்க்கு வருவது நாம் கொண்டாடும் இயேசுவின் பிறப்பு பெருவிழா. எல்லா இடங்களையும் அழகு செய்து வாழ்த்துகளை சொல்லி புத்தாடைகள் அணிந்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற ஒரு விழா கிறிஸ்மஸ் விழா தான். எல்லா மதத்தினரும் உணர்ந்துகொள்ளும் விழா இதுதான் என்றால் இது மிகையல்ல. இப்படி இன்று நாம் கொண்டாடிவரும் இப்பெருவிழாவை வரலாற்றின் அடிப்படையில் அறிந்து கொள்ள முயல்வோம்.
வரலாற்று ஆதாரங்களை புரட்டிப்பார்த்தல் ஒரு குறிப்பட்;ட நாளிலோ அல்லது காலக்கட்டத்திலோ கிறிஸ்மஸ் கொண்டப்பட்டது என்று உறுதியிட்டு கூறமுடியாது. ஆனால் மக்கள் மத்தியிலே பல்வேறு வகையான கொண்டாட்டங்கள் இருந்ததை காணமுடிகிறது. பல்வேறு நாடுகளில் மிகவும் குறிப்பாக குளிர் நிறைந்த நாட்களில் விழாக்கள் கொண்டாடியதை பார்க்க முயலும்போது பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி செல்லவேண்டும்.
மெசபட்டோமிய மரபுப்படி குளிர் காலத்தில் (டிசம்பர் ஐனவரி)அவர்களது புத்தாண்டை 12 நாட்கள் கொண்டாடியுள்ளனர். இவர்கள்; பல கடவுள்களை வழிபட்டு வந்தவர்கள். இதில் “மார்துக்” என்ற கடவுளை எல்லா கடவுள்களிலும் பெரிய முதன்மையான கடவுளாக எண்ணினர். புத்தாண்டு தினத்தன்று கடவுள் “மார்துக்” போரிட்டு தீமை செய்தவர்களை அழிப்பது வழக்கமாக நம்பப்பட்டது விழாவாக கொண்டாடப்பட்டது. இதே போன்று பாரசீகம் பாபிலோனியாலியா பழைய கிரேக்கம் போன்ற பகுதிகளிலும் டிசம்பர் – ஜனவரி மாதங்களில் பல்வேறு முக்கியமான விழாக்கள் கொண்டாப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. இந்த நாட்களில் நகரின் முக்கிய தெருக்களில் நடனமாடி உறவினர்கள் நண்பர்களை சந்தித்து வாழ்த்துக் கூறி சிறப்புவிருந்து அன்பளிப்புகள் கொடுத்தல் ஆகியவை குறிப்பிடக்கூடிய அளவில் இடம் பெற்றுள்ளன.
இதே காலக்கட்டத்தில் வாழ்ந்து வந்த உரோமையர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் யேசுவின் உயிர்ப்பை மட்டுமே பெருவிழாவாக கொண்டாடி வந்துள்ளனர். ஏனென்;றால் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் கிறிஸ்துவம் ஒரு அங்கிகரிக்கப்;பட்ட மதமாகவோ அரசியல் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட மதமாகவோ இல்லை. எனவே பல்வேறுபட்ட துன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் உட்பட்டது.
பல்வேறு வகையான துன்பங்களை கொடுமைகளை அனுபவித்த காலக் கட்டத்தில் இவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடியதாக ஒன்றும் குறிக்கப்படவில்லை. அதே வேளையில் திருச்சபையின் ஆரம்ப காலக்கட்டத்தில் வாழ்ந்து வந்த பல்வேறுபட்ட அறிஞர்கள் பல்வேறு வகையான கருத்துகளை தருகிறார்கள். அதன் அடிப்படையில் “டியனோசியஸ் எக்சிகுஸ்” என்பவரின் கூற்றுப்படி கி மு 4 நூற்றாண்டிலிருந்து பல்வேறு முக்கிய இடங்களில் கிறிஸ்துவம் வேரூண்ற ஆரம்பித்தது. எகிப்து அந்தியோருக்கு எருசலேம் உரோமை அலெக்சான்திரியா போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்கள் சிலர் கிறிஸ்துவர்களாகவும் மற்றும் பலர் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இப்படி பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் டிசம்பர் 25ந்தேதியின்று தங்களது குல தெய்வமான “சூரிய கடவுளின்” பிறந்த நாளை கொண்டாடி வந்துள்ளனர். கிறிஸ்துவம் பரவி வந்த அந்த காலக்கட்டத்தில் பலர் கிறிஸ்துவர்களாகவும் மாறினர். ஆனால் தங்களது பழைய பழக்க வழக்கங்களை மாற்ற இயலாத நிலையில் தங்களது வழக்கமான விழாவான சூரிய கடவுளின் பிறந்த நாளை டிசம்பர் 25 கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதே சமயத்தில் கிறிஸ்துவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டுகளில் (321) டிசம்பர் 25ம் தேதியின்று இரண்டு விழாக்களையும் கொண்;டாட சட்டம் இயற்றப்பட்டதையும் அந்த நாளை விடுமுறை நாளாக கடைபிடித்துள்ளதையும் அறிய முடிகிறது. நாட்கள் செல்லச் செல்ல கிறிஸ்துவ மதம் வளர்ச்சி கண்;டது. அதே வேளையில் கிறிஸ்துவம் ஒரு மதம் என்ற நிலையை அடைந்தது அரசும் அங்கிகரித்து ஏற்றுக்கொண்;டது. ஏறக்குறைய 353-ஆண்டில் திருத்தந்தை முதலாம் ஜுலியஸ் என்பவர் டிசம்பர் 25 அன்று யேசுவின் பிறப்பை கொண்டாட திருச்சபையில் அனுமதி வழங்கினார். ஆனால் 440க்கு பிறகுதான் கிறிஸ்மஸ் ஒரு பெருவிழா என்ற நிலையில் உணர்ந்து கொண்டாடப்பட்டதாக அறிய முடிகிறது.
நான்காம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்த புனித அகுஸ்தினார் குறிப்படுகிறார். “இது (கிறிஸ்மஸ்) ஒரு தனி விழா அல்ல மாறாக மீட்பை மையப்படுத்தி இன்றே நமது மீட்பு உதயமானது” என்ற நிலையில் உணர்ந்து கொண்டாட வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.
No comments:
Post a Comment