இயேசுவின் தலைமைத்துவம்: பாதம் கழுவும் இயேசு
உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு நோக்கத்துடன் தான் வாழ்கிறான், செயல்படுகிறான். இன்றைய மனிதன் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியைக் கண்டு ஆனந்தமடைகிறான். ஒவ்வொரு மனிதனும் ஒரு உயர்ந்த நிலையில் வாழ வேண்டும், வளர வேண்டும் மேன்மையான முதன்மையான பதவிகளை வகிக்க வேண்டும் கை நிறைய சம்பளம் வாங்கக்கூடிய அளவிற்கு பட்டம் பதவிகள் கிடைக்க வேண்டும் என்பது கடினப்பட்டு உழைத்து வாழ்வை நடத்துகின்ற ஒவ்வொரு குடும்பத்தின் எண்ணமும் கவலையுமாக உள்ளது. அதே வேளையில் வேறு சிலர் தங்களது பதவியை தலைமை பொறுப்பை தக்க வைத்து கொள்ள எப்படியெல்லாம் செயல்படலாம் நற்பெயரை காத்து கொள்ளலாம் மற்றவரை மட்டம் தட்டி தான் முன்னேறலாம் என்ற சுயநலப் போக்குடன் செயல்படுவதையும் கண்கூடாக காண முடிகிறது. இதற்கெல்லாம் மாறான ஒருநிலையில் யேசுவின் தலமைத்துவம் மையப்படுத்துகிறது இந்த பாதம் கழுவும் நிகழ்வின் மூலம.; ஒவ்வொருக்கும் கொடுக்கப்பட்டுள்ள பணியில் தன்னையும் தனது திறமைகளையும் முதன்மைப்படுத்தி தன்னுடன் பணிபுரியும் சக மனிதனை நேசிக்க, மதிக்க, அன்புசெய்ய மறந்துவிட்ட நிலையை மாற்றி உண்மையான அன்பின் பண்பு நலன்களில் வளர துணைபுரிய வேண்டும்.
இயேசுவின் பாதம் கழுவும் இந்த செயல் ஒவ்வொரு நபரையும் இணைக்கவும், கடவுளின் அன்பை உணரவும் செய்கின்ற உன்னதமான நிலை. இயேசு கடவுளின் மகன் ஏன் தன்னையே தாழ்த்த வேண்டும். ஆதுவும் ஒரு அடிமையின் நிலைக்கு தன்னைத் தாழ்த்தக் காரணம் என்ன? மனிதத்தை அன்பு செய்யதன் செயல்பாடுதானே.
பேதுருவின் பார்வையில் இயேசு ஒரு பெரிய போதகராக, மெசியாவாக, தலைவராக கருதப்படுகிறார். இயேசுவைத் தலைவராக ஏற்றுக் கொண்ட சீடர்கள் தங்களது தலைவருக்கு பணிபுரியும் நபர்களாகத்தான் நினைத்தனர். ஆனால் மனிதத்தை மதித்கும் இயேசுவின் பணி தனியான, வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது. எனவேதான் பேதுருவால் இத்தகைய நிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. பேதுருவின் பாதங்களை கழுவ இயேசு முன் வந்த போதும் மறுப்பு தெரிவிக்கிறார். பிறகு யேசுவின் பணியில் பங்கு கொள்ள உரிமை தரும் நிலை என்பதை யேசுவின் மூலம் விளக்கம் கண்டு முன்வருகிறார் முழுவதும்.
இயேசுவின் குண நலன்களில் அதிமாக வெளிப்படுத்தப்படுவது அவரது அன்பு. தமது அன்பை முழுமையாக வெளிப்படுத்துவதில் எந்தவித தயக்கமோ கலக்கமோ இல்லை என்பது நமக்கு தெளிவாக புலப்படுகிறது, இந்த பணிந்து செயல்படும் நிகழ்வில் நன்றாக வெளிப்படுகிறது. உண்மையான அன்பு என்பது எப்போதுமே அதிமான தாழ்ச்சி மற்றும் நான் என்ற தன்னல போக்குகளைக் கடந்தது. உண்மையான எந்த அன்பர்களுக்கிடையேயும் கேவலாமான அல்லது கீழ்த்தரமான செயல்கள் என இனம் காணமுடியாது. அதே வேளையில் அதிகாரத்துடன், ஆணவத்துடன், மற்றவர்களை மதியாத எண்ணங்களுடன் செயல்படுகின்ற எந்த ஒரு நபருடைய வாழ்விலும் செயலிலும் மட்டம் தட்டுகின்ற, கேவலமான, கீழ்த்தரமான செயல்கள் என பிரித்து செயல்படுவதை காணமுடியும்.
இயேசுவின் நிலை கடவுளுடன் இணைந்த இறுக்கமான நிலைதான். இயேசுவின் எண்ணத்திலும், பார்வையிலும், செயல்களிலும் முதன்மைபடுத்தப் பட்டவர்கள் தந்தையாம் இறைவனும் அடிமட்ட நிலையில் துன்புறுகின்ற ஏழைகளுமே. மனிதனையும் கடவுளையும் முழுமையாக அன்பு செய்யக்கூடிய நபர்களால் மட்டுமே தெய்வீக வல்லமையின் செயல்களை கண்டு உணர முடியும் வெறும் மனித சக்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியாது.
பாதங்களைக் கழுவுகின்ற செயல் யூத மத நடைமுறையில் இருந்த ஒன்று. விருந்துக்கு உறவினர்களின் வீடுகளைத் தேடி பல மைல் தூரம் நடந்து காலணி இல்லாமல் புழுதிபடிந்த பாதைகளில் வருகின்ற நபர்களில் பாதங்கள் கறைபடிந்து இருப்பதை நாம் கற்பனை செய்து பார்த்தால் தான் இந்த உண்மையை புரிந்து கொள்ள முடியும். இப்படி விருந்தினர்கள் வீடுகளுக்கு வரும்போது கறைபடிந்துள்ள பாதங்களை கழுவ அடிமைகள் வேலையாட்கள் அமர்த்தப் படுவதும் இயல்பான ஒன்று. இப்படி பாதங்களை கழுவிய பிறகு தான் விருந்துகளில் கலந்து கொள்வதும் முறையான செயலாக மதிக்கப் பட்டது.
இந்த வரலாற்று நிகழ்வுகளை நோக்கும் போது நம்மில் பலருக்கு இயேசுவில் செயல் ஒரு சாதாரண செயல்தானே எனத் தென்படலாம். யூத வரலாற்றில் விருந்தினர்களின் பாதங்களை எந்த ஒரு வீட்டுத் தலைவனும் கழுவியதில்லை மாறாக இத்தகைய செயல்கள் மதிப்பில்லதா செயல்களாக கீழ்த்தரமான செயல்களாக கருதினார்கள். ஏனவே அதற்கென தனி வேலையாட்களை அமர்த்தி விருந்தினர்களின் பாதங்களை கழுவும் செயல்கள் நடந்தன. ஆனால் இயேசுவில் செயல்பாடு சதாரமான அல்லது ஒரு இயல்பான செயல்பாடு அல்ல. காரணம் தலைவராக விளங்கும் இயேசு தன்னையே பணியாளாக, வேலைக்காரனாக மற்றிகொண்டு பணிபுரிவது தான் இயேசுவின் தனித்தன்மை. கடவுளும் மனிதனுமானவர் தன்னையே ஒரு அடிமையின் நிலைக்கு தாழ்த்தக்கூடிய அந்த பணிநிலை தான் மகத்துவமான செயல். இது எல்லா சாதாரண மனிதருக்கும் வந்துவிடாது. கடவுளையும் மனிதனையும் மையப்படுத்துகின்ற நபர்களால் மட்டுமே முடியும். குடவுளுடன் உள்ள உறவிலும் சக மனிதனுடன் உள்ள உறவிலும் நிலைத்து நீடித்து நிற்கின்ற மனிதனாலே இத்தகைய அளவுகடந்த அன்பு நிலைகளை பரிமாறிக் கொள்ள முடியும்.
அருள்பணி. S. எம்மானுவேல், நல்லாயன் குருத்துவக் கல்லூரி, கோவை.
No comments:
Post a Comment